நடிகை காயத்ரி சங்கரின் அடுத்த படம் அறிவிப்பு.. ஹீரோ, இயக்குனர் யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Friday,July 05 2024]

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் மட்டும் 8 திரைப்படங்கள் நடித்த நடிகை காயத்ரி நடிக்கும் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்தின் நாயகன் மற்றும் இயக்குனர் யார் யார் என்பதை பார்ப்போம்.

’18 வயசு’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் நடிகை ஆக அறிமுகமான காயத்ரி, அதன் பின்னர் விஜய் சேதுபதி உடன் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ ’ரம்மி’ ’புரியாத புதிர்’ ’ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ ’சீதக்காதி’ ’சூப்பர் டீலக்ஸ்’ ’துக்ளக் தர்பார்’ ’மாமனிதன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். மேலும் கமல்ஹாசனின் விக்ரம் உட்பட சில படங்களில் நடித்த அவர் தற்போது ஒரு புதிய படத்தின் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த புதிய படத்தில் நாயகனாக கலையரசன் நடித்த உள்ளார் என்பதும் இந்த படத்தை சாய் ரோஷன் என்பவர் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் சாய் ரோஷன் ஏற்கனவே ’நேற்று இந்த நேரம்’ என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

 

More News

ஏஐ தொழில்நுட்பம் மூலம் விஜயகாந்த்.. பிரேமலதா அதிரடி அறிவிப்பால் திரையுலகம் அதிர்ச்சி..!

ஏஐ தொழில்நுட்பம் மூலம் விஜயகாந்தை பயன்படுத்த இதுவரை யாருக்கும் அனுமதி வழங்கவில்லை என்றும் விஜயகாந்தை பயன்படுத்துவதாக திரையுலகினர் இசை வெளியீட்டு

'கோட்' படத்தின் சூப்பர் அப்டேட் சொன்ன அர்ச்சனா  கல்பாத்தி: ரசிகர்கள் கொண்டாட்டம்..!

தளபதி விஜய் நடித்துள்ள 'கோட்' படத்தின் சூப்பர் அப்டேட்டை இந்த படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி  தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளதை அடுத்து ரசிகர்கள் உற்சாகத்தில் கொண்டாடி வருகின்றனர்..

'கூலி' திரைப்படத்தில் நடிப்பதை உறுதி செய்த ஸ்ருதிஹாசன்.. சூப்பர் புகைப்படம் வைரல்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'கூலி' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்க இருப்பதை அடுத்து இந்த படத்தில் உலக நாயகன் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் நடிக்க இருப்பதாக

'தங்கலான்' டிரைலர் குறித்த சூப்பர் தகவல்.. விக்ரம் ரசிகர்கள் உற்சாகம்..!

விக்ரம் நடிப்பில், பா. ரஞ்சித் இயக்கிய 'தங்கலான்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.

'டீன்ஸ்' ரிலீஸ் நேரத்தில் திடீரென போலீஸ் புகார் அளித்த பார்த்திபன்.. யார் மீது? என்ன காரணம்?

தமிழ் திரை உலகின் பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன், தான் இயக்கிய 'டீன்ஸ்' என்ற திரைப்படத்தை வரும் 12ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ள நிலையில் திடீரென அவர் கோவையில் உள்ள