நடிகை காயத்ரி சங்கரின் அடுத்த படம் அறிவிப்பு.. ஹீரோ, இயக்குனர் யார் தெரியுமா?
- IndiaGlitz, [Friday,July 05 2024]
மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் மட்டும் 8 திரைப்படங்கள் நடித்த நடிகை காயத்ரி நடிக்கும் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்தின் நாயகன் மற்றும் இயக்குனர் யார் யார் என்பதை பார்ப்போம்.
’18 வயசு’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் நடிகை ஆக அறிமுகமான காயத்ரி, அதன் பின்னர் விஜய் சேதுபதி உடன் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ ’ரம்மி’ ’புரியாத புதிர்’ ’ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ ’சீதக்காதி’ ’சூப்பர் டீலக்ஸ்’ ’துக்ளக் தர்பார்’ ’மாமனிதன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். மேலும் கமல்ஹாசனின் விக்ரம் உட்பட சில படங்களில் நடித்த அவர் தற்போது ஒரு புதிய படத்தின் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த புதிய படத்தில் நாயகனாக கலையரசன் நடித்த உள்ளார் என்பதும் இந்த படத்தை சாய் ரோஷன் என்பவர் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் சாய் ரோஷன் ஏற்கனவே ’நேற்று இந்த நேரம்’ என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
"Proud to announce @SGayathrie as the Female Lead in our #ProductionNo2. Her talent will light up the screen!"
— Clapin Filmotainment (@ClapinfilmProd) July 4, 2024
Writer & Director - @Sai_Roshan_KR
@NaveenKannu23 @createraindrops @divakar_kumar19 @cuviyam @lalgudihari @SathishwaranPRO pic.twitter.com/4AWst6rapz