மொட்டைத் தலையுடன் மாஸ் லுக்கில் காயத்ரி சங்கர்.. ஹாலிவுட் படத்தில் நடிக்கின்றாரா?

  • IndiaGlitz, [Monday,July 31 2023]

விஜய் சேதுபதியுடன் அதிக படங்களில் நடித்துள்ள நடிகை காயத்ரி சங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மொட்டை தலையுடன் பாலைவனத்தில் மாஸ் ஆக இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அவர் ஹாலிவுட் திரைப்படத்தில் நடிக்கிறாரா? என ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

விஜய் சேதுபதி உடன் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ ’ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ ’புரியாத புதிர்’ ’சூப்பர் டீலக்ஸ்’ ‘சீதக்காதி’ ’மாமனிதன்’ உள்ளிட்ட படங்களில் நடித்த காயத்ரி சங்கர், கமல்ஹாசனின் ’விக்ரம்’ படத்தில் பஹத் பாசிலுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் காயத்ரி சங்கர் Mad Max: Fury Road என்ற ஹாலிவுட் படத்தில் வரும் கதாபாத்திரம் போல மொட்டை தலையுடன் பாலைவனத்தில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்த மாஸ் புகைப்படத்தை பார்த்து ஆச்சரியம் அடைந்த ரசிகர்கள் காயத்ரி சங்கர் ஹாலிவுட் திரைப்படத்தில் நடிக்கிறாரா? என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர். ஆனால் இந்த புகைப்படம் AI டெக்னாலஜி மூலம் உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

More News

செல்வராகவன் - யோகி பாபு இணையும் அரசியல் படம்.. பிரபல இயக்குனரின் மகள் தான் நாயகியா?

செல்வராகவன் மற்றும் யோகி பாபு இணைந்து நடிக்கும் அரசியல் திரைப்படத்தில் பிரபல இயக்குனரின் மகள் தான் நாயகியாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' இயக்குனரின் அடுத்த படம்.. முக்கிய அப்டேட்..!

இயக்குனர் பா ரஞ்சித் தயாரிப்பில் அதியன் ஆதிரை என்பவரின் இயக்கத்தில் உருவான 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' என்ற திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியானது

பிரபல நடிகையுடன் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்: அந்தரங்க வீடியோவை வெளியிட்ட தயாரிப்பாளர்..!

பிரபல நடிகையுடன் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்த தயாரிப்பாளர் ஒருவர் நடிகையின் அந்தரங்க வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ரூ.12 லட்சம் செலவு செய்து நாயாக மாறிய யூடியூப் பிரபலம்… வைரலான தகவல்!!

விலங்குகள் மீது அதிக ஆர்வம் கொண்ட யூடியூப் பிரபலம் ஒருவர் தன்னுடைய ஒட்டுமொத்த உருவத்தையும் மறைத்து

ரூ.500 கோடி பட்ஜெட்டாக இருந்தாலும் அதில் நடிக்க மாட்டேன்? நடிகை மாளவிகா மோகனன் அதிரடி!!

ஏறக்குறைய அனைத்து தென்னிந்திய மொழி சினிமாக்களிலும் நடித்து பிரபலமாக இருந்துவரும் நடிகை மாளவிகா மோகனன் தனது 10 வருட சினிமா வாழ்க்கைக்குப் பிறகு முக்கிய முடிவு ஒன்றை அறிவித்து இருக்கிறார்