என்னை பாஜகவில் இருந்து நீக்க தமிழிசைக்கு உரிமையில்லை: காயத்ரி ரகுராம்
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் நடிகை காயத்ரி ரகுராம் போதையில் கார் ஓட்டியதாக சர்ச்சை எழுந்தது. இதற்கான விளக்கத்தை காயத்ரி தெளிவாக கூறிவிட்டபோதிலும் தொடர்ந்து இதுகுறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பரவி வருகிறது.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து கருத்து கூறிய பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், 'காயத்ரி ரகுராம் பாஜகவிலேயே இல்லை' என்று கூறினார். தமிழிசையின் இந்த கருத்துக்கு காயத்ரி ரகுராம் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது:
"தமிழிசை அவர்களே! நான் கம்ப்யூட்டர் மூலம் பாஜகவின் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டேன். உங்களுக்கு கட்சியில் யாரையும் சேர்க்கவோ விலக்கவோ உரிமை இல்லை பாஜக ஒரு தேசியக் கட்சி. நான் பாஜகவில் இருப்பது நரேந்திர மோடிக்காகவே தவிர உள்ளூர் முகங்களுக்காக அல்ல. நீங்கள் தமிழக பாஜகவின் தலைவர் மட்டுமே. உங்களால் அனைத்து முடிவுகளையும் எடுக்க முடியாது.
மேலும் தமிழக பாஜக யுவ மோர்சாவின் செயல்வீரர்களும் தலைவர்களும் பெண்களுக்கு எதிராக உள்ளனர். அவர்கள் பெண்களை மிரட்டுகின்றனர். அவர்களை யாரும் கேள்வியே கேட்கக்கூடாதா? என்று ஆவேசமாக காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.
தமிழகத்தில் நோட்டா வாக்குகளின் எண்ணிக்கையை விட குறைவாக இருக்கும் பாஜக, கட்சியை வளர்க்கும் பணியில் ஈடுபடாமல் உட்கட்சி மோதலில் ஈடுபட்டிருப்பது அக்கட்சியின் தொண்டர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments