என்னை பாஜகவில் இருந்து நீக்க தமிழிசைக்கு உரிமையில்லை: காயத்ரி ரகுராம்

  • IndiaGlitz, [Wednesday,November 28 2018]

சமீபத்தில் நடிகை காயத்ரி ரகுராம் போதையில் கார் ஓட்டியதாக சர்ச்சை எழுந்தது. இதற்கான விளக்கத்தை காயத்ரி தெளிவாக கூறிவிட்டபோதிலும் தொடர்ந்து இதுகுறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பரவி வருகிறது.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து கருத்து கூறிய பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், 'காயத்ரி ரகுராம் பாஜகவிலேயே இல்லை' என்று கூறினார். தமிழிசையின் இந்த கருத்துக்கு காயத்ரி ரகுராம் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது:

தமிழிசை அவர்களே! நான் கம்ப்யூட்டர் மூலம் பாஜகவின் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டேன். உங்களுக்கு கட்சியில் யாரையும் சேர்க்கவோ விலக்கவோ உரிமை இல்லை பாஜக ஒரு தேசியக் கட்சி. நான் பாஜகவில் இருப்பது நரேந்திர மோடிக்காகவே தவிர உள்ளூர் முகங்களுக்காக அல்ல. நீங்கள் தமிழக பாஜகவின் தலைவர் மட்டுமே. உங்களால் அனைத்து முடிவுகளையும் எடுக்க முடியாது.

மேலும் தமிழக பாஜக யுவ மோர்சாவின் செயல்வீரர்களும் தலைவர்களும் பெண்களுக்கு எதிராக உள்ளனர். அவர்கள் பெண்களை மிரட்டுகின்றனர். அவர்களை யாரும் கேள்வியே கேட்கக்கூடாதா? என்று ஆவேசமாக காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.

தமிழகத்தில் நோட்டா வாக்குகளின் எண்ணிக்கையை விட குறைவாக இருக்கும் பாஜக, கட்சியை வளர்க்கும் பணியில் ஈடுபடாமல் உட்கட்சி மோதலில் ஈடுபட்டிருப்பது அக்கட்சியின் தொண்டர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது.

More News

திரைப்படம் ஆகிறது சந்திரபாபு வாழ்க்கை வரலாறு

எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகராகவும், ஹீரோவாகவும் தமிழ் சினிமாவில் இருந்தவர் நடிகர் சந்திரபாபு.

'2.0' சிட்டிக்கு வாழ்த்து கூறிய 'பேட்ட'

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' மற்றும் 'பேட்ட' ஆகிய இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியாகும் நிகழ்வு நீண்ட வருடங்களுக்கு பின்னர் தற்போது தான் நடக்கின்றது.

ஐஸ்வர்யாவை அடுத்து மகத்துடன் ஜோடி சேர்ந்த யாஷிகா

பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது இணைபிரியாத தோழிகளாக மாறிவிட்ட ஐஸ்வர்யா தத்தா மற்றும் யாஷிகா ஆகிய இருவருக்கும் திரையுலகில் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.

ஜெர்மனியில் அஜித் முக்கிய ஆலோசனை: வைரலாகும் புகைப்படங்கள்

தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் ஒருபக்கம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. இன்னொரு பக்கம் அவர் நடிக்கவுள்ள

'தளபதி 63' படத்தின் கனவு நாயகியின் பரபரப்பான கருத்து

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கவுள்ள 'தளபதி 63' படத்தின் நாயகியாக 'கீதா கோவிந்தம் படத்தில் நடித்த ராஷ்மிகா நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.