நீங்கள் எல்லாம் ஆட்டு மந்தைகள்: காயத்ரி ரகுராமின் சர்ச்சை டுவீட்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களில் ஒருவரான காயத்ரி ரகுராம், பிக்பாஸ் நிகழ்ச்சியில் தமிழ் பெண்ணான தன்னை தமிழ் மக்கள் ஆதரிக்காமல் கேரள பெண்ணான ஓவியாவை ஆதரவு கொடுத்தது குறித்து சர்ச்சைக்குரிய டுவீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
நான் தமிழ் பெண்ணாக இருந்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நீங்கள் என்னை ஆதரிக்கவில்லை. என்னை மோசமான பெண்ணாக நினைத்து தமிழர்கள் என்னை ஒதுக்கினார்கள். தமிழ் பெண்ணான என்னை நிராகரித்து விட்டு கேரளாவை சேர்ந்த ஒரு பெண்ணை தேர்வு செய்தீர்கள். தமிழர்கள் சரியானதையே எப்போதும் தேர்வு செய்வார்கள் என்று சமூக தளங்களும் அதற்கு ஆதரவு கொடுத்தன.
அதேபோல் இப்போது திராவிட கட்சிகள் உங்களை முட்டாளாக்கி வருகின்றனர். அவர்களை ஏன் நீங்கள் நிராகரிக்கவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியில் சரியானவர்களை தேர்வு செய்ததாக கூறும் தமிழர்கள் திராவிடக் கட்சிகளை நிராகரிக்காதது ஏன்? என்று காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார் காயத்ரிரகுராம். மேலும் நீங்கள் அனைவரும் மிகவும் குழப்பமான மக்கள். உங்களை எல்லாம் எளிதாக விலை கொடுத்து வாங்கி விடலாம். நீங்கள் எல்லாம் ஆட்டு மந்தைகள் என்றும் காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.
காயத்ரி ரகுராமின் இந்த பதிவிற்கு நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். குறிப்பாக தமிழர்கள் எப்போதும் உண்மையாக இருப்பவர்களுக்கு ஆதரவு கொடுப்பார்கள், அது பிக்பாஸ் ஆக இருந்தாலும் சரி, அரசியல் ஆக இருந்தாலும் சரி என்பது போன்ற கமெண்ட்டுக்கள் பதிவாகி வருகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com