close
Choose your channels

ஓவியா என் சகோதரி: ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்த பிக்பாஸ் பிரபலம்

Monday, April 30, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஓவியா என் சகோதரி: ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்த பிக்பாஸ் பிரபலம்

நடிகை ஓவியா ஏற்கனவே சினிமாவில் பல படங்கள் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அவர் பிரபலம் அடைந்தார். அவருடைய உண்மையான இயல்பான நடவடிக்கைகள் அனைவரையும் கவர்ந்தன. இந்த நிலையில் ஓவியா எந்த அளவுக்கு பாசிட்டிவ்வாக புகழ் பெற்றாரோ, அதே அளவுக்கு நெகட்டிவ்வாக புகழ் பெற்றவர்கள் ஜூலியும் காயத்ரி ரகுராமும் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் நேற்று நடிகை ஓவியாவின் பிறந்த நாளை அடுத்து அவருக்கு வாழ்த்து கூறி காயத்ரி ரகுராம் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:

ஓவியாவுக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்த ஆண்டு உனக்கு நல்ல வாழ்க்கை அமையட்டும். பிக்பாஸ் நிகழ்ச்சியில் நீ எப்படி பிரபலமடைந்தாயோ அதே போல் திரைப்படங்களின் மூலமும் நீ பிரபலமடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இந்த ஆண்டு நீ அதிக படங்களில் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை. நான் இதை ஒரு தோழியாகமின்றி ஒரு சகோதரியாகவும் கூறுகின்றேன்.  நான் எப்பொழுதும் உன்னுடன் இருப்பேன். இதை நான் விளையாட்டிற்காக கூறவில்லை. எனது இதயத்திலிருந்து வரும் வார்த்தைகள் இவை. உனக்கு கடவுளின் ஆசீர்வாதம் எப்போதும் உண்டு' என்று கூறியுள்ளார். காயத்ரி ரகுராமின் இந்த வாழ்த்துக்கள் ஓவியா ஆர்மியினர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment