பழனி முருகனுக்கு காவடி தூக்கி காயத்ரி ரகுராம்: வெயிட்டான வேண்டுதலா?
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில ஆண்டுகளாக பாஜகவில் இருக்கும் நடிகையும் நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம் அக்கட்சியின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் செயலாளர் பதவி மட்டுமே கிடைத்துள்ளது. இதனையடுத்து பாஜகவில் பெரிய பதவி வேண்டி அவர் பழனி முருகனுக்கு காவடி தூக்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
பழனியில் காவடி தூக்கி தண்டாயுதபாணியை தரிசனம் செய்தால் கேட்ட வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். அந்த வகையில் தற்போது பாஜகவை சேர்ந்த காயத்ரி ரகுராம் பழனியில் காவடி தூக்கியுள்ளார். இதனை அடுத்து செய்தியாளர்களிடம் சந்தித்த அவர் ’தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றும் குஷ்புவை அடுத்து இன்னும் சிலர் பாஜகவில் இணைவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சமீபத்தில் பாஜகவில் சேர்ந்த குஷ்புவுக்கு வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்றும் அனேகமாக அவர் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடுவார் என்றும் கூறப்படுகிறது. ஒருவேளை சட்டமன்ற தேர்தலில் அவருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்காவிட்டால் ராஜ்யசபா எம்பி பதவி கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நேற்று கட்சியில் சேர்ந்த குஷ்புவுக்கு எம்பி அல்லது எம்.எல்.ஏ பதவி கிடைக்கவிருக்கும் நிலையில் பழனி முருகனுக்கு காவடி தூக்கியதன் பயனாக காயத்ரி ரகுராமுக்கும் வெயிட்டான பதவி கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Palani palkavadi venduthal. pic.twitter.com/oaXYNtoWCh
— Gayathri Raguramm (@gayathriraguram) October 14, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com