இன்றே நிறுத்துங்கள், இல்லையேல்...எச்சரிக்கை விடுத்த காயத்ரி ரகுராம்

  • IndiaGlitz, [Friday,March 09 2018]

நடிகை, நடன இயக்குனர் என கோலிவுட் திரையுலகில் வலம் வந்து கொண்டிருப்பவர் காயத்ரி ரகுராம். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரே இவர் பிரபலம் அடைந்தார். ஆனால் ஓவியாவுக்கு எதிராக இவர் பிக்பாஸ் வீட்டில் செயல்பட்டதால் ஓவியாவின் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களின் கோபத்திற்கு ஆளானார். மக்களால் அதிகம் வெறுக்கப்பட்டவர்கள் பட்டியலில் காயத்ரி ரகுமார் மற்றும் ஜூலி பெயர்கள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தன்னை பற்றி தகாத வார்த்தைகளுடன் விமர்சனம் செய்வதை இன்றுடன் நிறுத்தி கொள்ள வேண்டும் என்றும், இல்லையேல் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்து சம்பந்தபட்டவரை கண்டுபிடிப்பேன் என்றும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்,.

தன்னைப்பற்றியோ அல்லது ஜூலி பற்றியோ யாராவது கெட்ட வார்த்தையில் விமர்சனம் செய்தால் அது தனிநபராக இருந்தாலும் சரி அல்லது ஒரு நிறுவனமாக இருந்தாலும் சரி. தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என காயத்ரி ரகுராம் எச்சரித்துள்ளார். ஆனால் அவருடைய இந்த பதிவின் கமெண்டிலேயே பலர் கெட்ட வார்த்தையால் திட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.