தமிழிசைக்கு காயத்ரி ரகுராமின் 'மெர்சல்' பதில்
Send us your feedback to audioarticles@vaarta.com
'மெர்சல்' படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி குறித்த வசனங்களுக்கு பாஜக தமிழக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருவது தெரிந்ததே. குறிப்பாக தமிழிசை செளந்திரராஜன் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் நீதிமன்றம் செல்லவிருப்பதாகவும் ஆவேசமாக கூறியுள்ளார்.
இந்த நிலையில் பாஜகவின் நிர்வாகியும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களில் ஒருவருமாகிய காயத்ரி ரகுராம், தமிழிசை கருத்துக்கு எதிர்க்கருத்தை தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
'மெர்சல்' ஒரு திரைப்படம் மட்டுமே. நடிகர்கள் வசனம் எழுதுவது இல்லை. அனைவருக்கும் கருத்து உண்டு. நாம் நடிகரை குறை சொல்ல வேண்டாம். படம் சென்சாரில் சான்று வாங்கியுள்ளது என்று ஒரு டுவீட்டும், திரைப்படம், அரசியல் கட்சிகள் விமர்சனங்களை ஏற்றுக் கொள்கிறது. பொழுதுபோக்கை பொழுதுபோக்காக பார்ப்போம். அதை நிஜ வாழ்க்கையில் ஒப்பிட வேண்டாம் என்று இன்னொரு டுவீட்டையும் பதிவு செய்துள்ளார்.
பாஜக தமிழக தலைவரின் கருத்துக்கு பாஜகவின் நிர்வாகி ஒருவரே எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி பிக்பாஸ் நிகழ்ச்சியால் பெரும்பாலானோர்களின் வெறுப்பை சம்பாதித்த காயத்ரி ரகுராமுக்கு இந்த இரண்டே டுவீட்டுக்களால் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மேலும் காயத்ரி ரகுராம் ஏற்கனவே தன்னை ஒரு விஜய் ரசிகை என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com