குஷ்பு ஏன் அமைதியாக இருக்கிறார்? கூவத்தூர் விவகாரம் குறித்து காயத்ரி ரகுராம் கேள்வி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
அதிமுகவில் இருந்து விலகிய ராஜு என்பவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகைகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் திரையுலகை சேர்ந்த பலர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் குஷ்பு உட்பட தேசிய மகளிர் ஆணையம் ஏன் அமைதியாக இருக்கிறது என்று நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் தனது சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பி உள்ளார். சமீபத்தில் அதிமுகவில் இணைந்த அவர் இது குறித்து மேலும் கூறியதாவது:
நடிகர்களை தரக்குறைவாக பேசியதற்காக நடிகர் சங்கம் கண்டித்து அவர் மீது வழக்கு போட வேண்டும். suo moto நடவடிக்கை வேண்டும்
இந்த மனிதர் பெண்கள் பற்றி, நடிகைகளைப் பற்றி எப்படி நினைக்கிறார் என்பது முற்றிலும் அருவருப்பானது. இதைப் பேசுவது மலிவானது, இந்த நபரின் தன்மையற்ற அநாகரிகம் குணம் எப்படி இருக்கிறது என்பதை மட்டுமே இது காட்டியுள்ளது
இந்த மலிவு மனப்பான்மை கொண்ட நபருக்கு ஏன் திமுகவை சேர்ந்த ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்துள்ளன? ஏன் அவரை நடிகைகள் மற்றும் பெண்களை பற்றி மலிவாக பேச அனுமதித்தார். ஊடகங்கள், பத்திரிகையாளர்கள் இப்படிப்பட்டவர்களை தடை செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை?
அவர் இந்த மனநிலையுடன் சென்று பாஜகவில் இணைந்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். அத்தகையவர்களை அவர்கள் வரவேற்பார்கள். NCW அமைதியாக இருக்கிறது, குஷ்புவும் அமைதியாக இருக்கிறார். ஒரு நடிகையாக நான் வருத்தப்படுகிறேன், இதுபோன்ற மோசமான கருத்துக்களை எதிர்கொள்ளும் எந்த நடிகையையும் நான் ஆதரிக்கிறேன்.
அவர் இந்த மனநிலையுடன் சென்று பாஜகவில் இணைந்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். அத்தகையவர்களை அவர்கள் வரவேற்பார்கள். NCW அமைதியாக இருக்கிறது, குஷ்புவும் அமைதியாக இருக்கிறார். ஒரு நடிகையாக நான் வருத்தப்படுகிறேன், இதுபோன்ற மோசமான கருத்துக்களை எதிர்கொள்ளும் எந்த நடிகையையும் நான்…
— Gayathri Raguramm 🇮🇳 (@Gayatri_Raguram) February 20, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments