இந்தி மொழியை கற்றுக்கொள்ளுங்கள்: வலியுறுத்தும் தமிழ் நடிகை
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘ஒரே நாடு ஒரே மொழி’ என இந்தியை நாடு முழுவதும் பரப்ப வேண்டும் என்ற ஒரு கருத்தை கூறினார். அமித்ஷாவின் இந்த கருத்துக்கு பெரிய அளவில் மற்ற மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பவில்லை. வழக்கம்போல் தமிழை வைத்து அரசியல் செய்யும் தமிழக அரசியல் கட்சிகள் இந்த விஷயத்தை கையில் எடுத்து அமித்ஷாவுக்கும் மத்திய அரசுக்கும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் நடிகையும், நடன இயக்குனரும் பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 1 போட்டியாளருமான காயத்ரி ரகுராம் தனது சமூக வலைத்தள பக்கத்தில், ‘இந்தி மொழி என்பது ஒரு குறிப்பிட்ட மாநிலத்திற்கான மொழி அல்ல. பல மாநிலங்களில் பயன்படுத்தப்பட்டும் பேசப்பட்டும் வரும் மொழி ஆகும். இந்தி நம்மை ஒற்றுமைப்படுத்துகிறது. இந்த தலைமுறையினர் இந்தி மொழி ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள பயன்படுவதாக வரவேற்கின்றனர். நமக்கு தேசிய கொடி உள்ளது, தேசிய பறவை உள்ளது, தேசிய விலங்கு, பழம் உள்ளது. எனவே ஏன் ஒரு தேசிய மொழி இருக்கக்கூடாது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
காயத்ரி ரகுராமின் இந்த டுவீட்டுக்கு வழக்கம்போல் சில ஆதரவும், பல எதிர்ப்பும் கொண்ட விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்தி மொழியை படிக்கலாமா? வேண்டாமா? என்பதை மக்களிடமே விட்டுவிடலாம், இந்த விஷயத்தில் அரசியல்வாதிகள் அரசியல் செய்வது தேவையற்றது என்பதே பலரது கருத்தாக உள்ளது.
Hindi is not language of any particular state but it’s widely spoken by most of the states and by most Indians. it unites us. Let this generation welcome the language to communicate understand each other. We have national flag song bird animal fruit why not a language that unite?
— Gayathri Raguramm (@gayathriraguram) September 15, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout