'பீஸ்ட்' படத்திற்கு தடையா ? காயத்ரி ரகுராம் சொன்ன நச் பதில்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படம் வரும் 13ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது.
இந்த நிலையில் ’பீஸ்ட்’ படத்திற்கு திடீரென குவைத் அரசு தடை செய்தது என்ற செய்தி விஜய் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை அடுத்து தமிழகத்திலும் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என இஸ்லாமிய அமைப்பு ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் இந்த அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியது .
இந்த நிலையில் இந்த அறிக்கை குறித்து கருத்து தெரிவித்த நடிகையும் பாஜக பிரபலமுமான காயத்ரி ரகுராம், ‘’பீஸ்ட்’ திரைப்படம் தீவிரவாதிகளுக்கு எதிரான தான் என்றும் முஸ்லிம்களுக்கு எதிராக இல்லை என்றும் இதனால் எதற்காக ’பீஸ்ட்’ படத்தை தடை செய்ய வேண்டும்? என்று கேள்வி எழுப்பி உள்ளார். காயத்ரி ரகுராமின் இந்த பதிவிற்கு வழக்கம்போல் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகின்றன.
Beast against terrorist, not against Muslims.
— Gayathri Raguramm ?????? (@BJP_Gayathri_R) April 5, 2022
Why ban ? pic.twitter.com/0PKJgGmsjq
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments