மோடி ஏன் விளக்கேற்ற சொன்னார்? காயத்ரி ரகுராம் விளக்கம்
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்திய பிரதமர் மோடி அவர்கள் இன்று இரவு 9 மணிக்கு வீட்டில் உள்ள விளக்குகளை அணைத்து விட்டு தீபம் ஏற்றும்படி கேட்டுக் கொண்டார். இதனையடுத்து பல்வேறு திரையுலக பிரபலங்கள் இந்த கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வீடியோவை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகையும் நடன இயக்குனரும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான காயத்ரி ரகுராம் இதுகுறித்து கூறியதாவது:
எல்லோரும் நம்முடைய ஒற்றுமையைக் காட்ட வேண்டும் என்பதற்காகவும், இந்த நேரத்தில் ஒற்றுமை முக்கியம் என்பதற்காவும், நம்முடைய முழுமையான ஆதரவையும் வலிமையையும் வெளிக்காட்ட வேண்டும் என்பதற்காகவும் மோடி அவர்கள் விளக்கேற்ற கூறியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் இந்த நேரத்தில் ஒரு பாசிட்டிவ் எனர்ஜி வேண்டும் என்பது மிகவும் முக்கியம். மேலும் நாம் அனைவரும் அவரவர் இஷ்டதெய்வத்தை மனதில் நினைத்து கொண்டு விளக்கேற்றினால் நம் அனைவருடைய வேண்டுதலும் ஒரே நேரத்தில் கடவுளிடம் போய் சேரும் போது அதற்கு அதிக வலிமை உண்டு. இதன் மூலம் நாம் கொரோனா வைரஸில் இருந்தும் தப்பிக்கலாம்.
ஒரு சில கட்சிகள், ஒரு சில பிரச்சனைகளுக்காக 100 நாட்கள் போராடி இருக்கிறார்கள். அதேபோல் கோலம் போட்டும் சில கட்சிகள் போராட்டம் செய்திருக்கிறார்கள். அதேபோல் நாடு முழுவதும் உலகம் முழுவதும் ஏற்பட்டிருக்கும் கொரோனா பிரச்சனைக்கு நாம் நமது வலிமையை, ஒற்றுமையை காட்ட வேண்டும் என்பதற்காக ஒரு ஒன்பது நிமிடம் விளக்கு ஏற்றி பிரதமருக்கு நமது ஒற்றுமையை நிரூபிக்க வேண்டும். எனவே இன்று இரவு 9 மணிக்கு எல்லோரும் அவரவர் வீட்டின் வாசலில் அல்லது பால்கனியில் அல்லது மொட்டை மாடியில் விளக்குகளை ஏற்ற வேண்டும் என்றும் குறிப்பாக இதில் சமூக இடைவெளியை மனதில் நிறுத்தி கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்’ என்று காயத்ரி ரகுராம் கேட்டுக்கொண்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments