டுவிட்டரில் இருந்து வெளியேறுகிறாரா காயத்ரி ரகுராம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது அவரை வில்லன் போல் பார்த்த பொதுமக்களும் நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சித்தனர். இந்த நிகழ்ச்சிக்க்கு பின்னரும் காயத்ரி ரகுராம் மீதான விமர்சனம் தொடர்ந்தது. அவர் எந்த டுவீட் போட்டாலும், அதில் ஆபாச வார்த்தை கலந்த கமெண்ட்டுக்கள் குவிந்தது.
ஒரு கட்டத்தில் பொங்கியெழுந்த காயத்ரி, இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசில் புகார் செய்து தன்னை கடுமையாக விமர்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போவதாகவும் குறிப்பிட்டிருந்தார். ஆனாலும் தொடர்ந்து அவர் மீதான விமர்சனங்கள் அதிகமானதே தவிர குறையவில்லை
இந்த நிலையில் டுவிட்டரில் இருந்து வெளியேறுவதாக காயத்ரி ரகுராம் அதிரடியாக அறிவித்துள்ளார்,.
அனைவருக்கும் குட்பை, இதுதான் எனது கடைசி டுவீட். இனிமேல் எந்த டுவிட்டும் போட மாட்டேன். எனக்கு இதுவரை ஆதரவு கொடுத்த அன்பு உள்ளங்களுக்கு எனது நன்றி என்று ஒரு டுவீட்டில் காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்த டுவீட்டுக்கு பின்னர் அவர் இரண்டு டுவீட்டுக்களை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments