டெல்லி வன்முறை: பா.ரஞ்சித்துக்கு காயத்ரி ரகுராம் கேள்வி!
Send us your feedback to audioarticles@vaarta.com
டெல்லியில் நடைபெற்று வரும் வன்முறை குறித்து இயக்குனர் பா.ரஞ்சித் தனது சமூக வலைத்தளத்தில், ‘குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்தத் தொடங்கியவுடன் அரசு வன்முறையை கையிலெடுத்தது. தலைநகரம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது, ஆளும் அரசு வன்முறையை ஊக்குவிக்கிறது. இதே நிலை தமிழகத்திற்கும் வந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது’ என்று பதிவு செய்திருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள பாஜக பிரமுகரும் நடிகையுமான காயத்ரி ரகுராம், ‘மதச்சார்பின்மை என்றால் என்ன? அது இந்துக்களுக்கும் மட்டும் தான் இருக்க வேண்டுமா? பாஜக சரியான பாதையில் சென்று கொண்டிருக்கின்றது. உங்களை போன்ற பெரியாரின் கைக்கூலிகள் தான் தமிழகத்தில் இந்து மதத்தை அழித்து கொண்டிருக்கின்றீர்கள். அதேபோல் பாகிஸ்தான் கைக்கூலியான காங்கிரஸ் இந்தியாவை அழித்து கொண்டிருக்கின்றது என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி வன்முறை குறித்த பா.ரஞ்சித்தின் டுவிட்டும் அதற்கு பதில் அளித்துள்ள காயத்ரி ரகுராம் டுவிட்டும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
What is the meaning of secularism? Is secularism apply only to Hindus? BJP is correcting the corrupt system. Because u Periyarist coolie mamas are destroying the hindu religion in Tamil Nadu. Congress pakistan kai coolies destroying Hindus in India. It’s u who provoke Muslims 1/2 https://t.co/grkAz4FI3c
— Gayathri Raguramm (@gayathriraguram) February 26, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments