விஜய்சேதுபதியின் 'மாஸ்டர்' பேச்சுக்கு காயத்ரி ரகுராம் கண்டனம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்று நடைபெற்ற ‘மாஸ்டர்’ இசை வெளியிட்டு விழாவில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி பேசியபோது, கொரோனா குறித்து யாரும் பயப்பட வேண்டாம் என்றும், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு மனமார்ந்த நன்றி என்று கூறினார்.
மேலும் மதம் மனிதனுக்கு அவசியமில்லாதது என்றும் மனிதனை மனிதன் தான் காப்பாற்ற வரவேண்டும் என்றும் கடவுள் வர மாட்டார் என்றும் தெரிவித்தார். மேலும் கடவுளை காப்பாற்றுகிறேன் என்று கூறும் கும்பலிடம் இருந்து சற்று தள்ளியே நில்லுங்கள் என்றும், கடவுளுக்கு தன்னை காப்பாற்றி கொள்ள தெரியும் என்றும் கடவுள் மேலே இருக்கின்றார் இது மனிதர்கள் வாழும் பூமி எனவே, மனிதனை மனிதன் தான் காப்பாற்றி கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில் விஜய்சேதுபதியின் பேச்சுக்கு பிக்பாஸ் பிரபலம் காயத்ரி ரகுராம் தனது சமூக வலைத்தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். மனிதனை மனிதன் நம்ப வேண்டும் என்ற கருத்து ஓகே என்றும் ஆனால் ஏராளமானோர் மத நம்பிக்கையில் இருக்கையில் அவர்களின் நம்பிக்கையை அழிக்க முடியாது என்றும் கூறினார்.
மேலும் மனிதன் பொய் சொல்வான், இன்னொரு மனிதனை புறக்கணிப்பான். ஆனால் கடவுள் இதனை செய்ய மாட்டார். மனிதனுக்கு கடவுள் உதவி செய்வார், அவனை உயர்த்த கை கொடுப்பார். ஒரு மனிதன் மூலம் தான் இன்னொரு மனிதனுக்கு வெற்றி கிடைக்கும் என்பது பொய். ஒரு மனிதனின் வெற்றி கடவுள் கையில் தான் உள்ளது. எனவே நான் மனிதனை விட கடவுளை தான் நம்புவேன்’ என்று கூறியுள்ளார். காயத்ரி ரகுராமின் இந்த டுவீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Good luck with believing another human nanba. No beliefs can destroyed. There are crores of believers (all religion) and if you think we all are dumb, I feel sorry you for believing another human who can lie and hate instantly. Life is designed by god only pic.twitter.com/IBOPuXkujp
— Gayathri Raguramm (@gayathriraguram) March 16, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com