கமல்ஹாசன் கருத்துக்கு காயத்ரி ரகுராம் பதிலடி!

இந்தி எதிர்ப்பு என்பது தமிழகத்தில் இன்று நேற்றல்ல, கடந்த ஐம்பது ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்தி எதிர்ப்பை அரசியல் லாபத்திற்கு பயன்படுத்திய கட்சிகளும் உண்டு. எனவே இந்தி எதிர்ப்பில் கிடைக்கும் அரசியல் லாபத்திற்காக தொடர்ச்சியாக தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு என்ற போராட்டங்களை அரசியல் கட்சிகள் நடத்தி வருகின்றன. இதுவரை எந்த ஒரு மாணவர் அமைப்பும் இந்தியை எதிர்த்து போராடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று காலை வீடியோ ஒன்றை வெளியிட்ட கமல்ஹாசன், அதில் இந்தி எதிர்ப்பு குறித்த தனது கருத்தை தெரிவித்திருந்தார். அதில், 'இந்தியா என்பது ஒரு அற்புத விருந்து. அதை கூடி உண்போம். திணிக்க நினைத்தால் குமட்டிவிடும் என்று தெரிவித்திருந்தார்.

கமல்ஹாசனின் இந்த கருத்து குறித்து தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்த காயத்ரி ரகுராம், 'வாழை இலை தேவை விருந்து சாப்பிட.. நம்மை தாங்கிப்பிடிக்க, ஒன்றிணைக்க ஒரு மொழியை கற்க வேண்டும். அதற்காக நம் மொழியை, கலாச்சாரத்தை விட்டுவிட வேண்டும் என்பது இல்லை' என்று தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் மற்றும் காயத்ரி ரகுராமின் கருத்துப்போரால் சமூக வலைத்தளம் பரபரப்பாகியுள்ளது

More News

கமல்ஹாசன், ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்த சுப்பிரமணியன்

மத்திய உள்துறை அமைச்சர் சமீபத்தில் 'ஒரே நாடு ஒரே மொழி' என்ற கொள்கையில் இருப்பதாகவும், அதற்காக இந்தி மொழியை நாடு முழுவதும் பரப்ப வேண்டும் என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.

விஜய்க்காக கொள்கையை விட்டுக்கொடுத்த நயன்தாரா!

Read more at: https://www.sify.com/movies/nayanthara-to-relax-her-policy-for-bigil-audio-launch-news-tamil-tjqkgobjieecd.html

அஜித் பட வசனம் இன்னும் ரசிகர்களுக்கு புரியவில்லை: நடிகை டாப்சி

அஜித் நடித்த 'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக இந்த படத்தில் அஜித் பேசும் வசனங்களில் ஒன்றான 'நோ மீன்ஸ் நோ'

மொழிக்காக நாங்கள் போராட தொடங்கினால்.. கமல்ஹாசன் எச்சரிக்கை

ஒரே நாடு ஒரே மொழி என்ற கருத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சமீபத்தில் தெரிவித்து இந்தியா முழுவதிலும் இந்தியை பரப்ப வேண்டும் என்று கூறியது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சூரியனால் முடியாதது இந்தியால் முடியுமா? வைரமுத்து கேள்வி

சூரியனால் கூட ஒட்டுமொத்த உலகிற்கு ஒரே நேரத்தில் பகலை கொடுக்க முடியாதபோது இந்தியால் மட்டும் எப்படி ஒரே இந்தியாவிற்கு ஒரே மொழியாக இருக்க முடியும் என்ற கேள்வியை கவியரசு வைரமுத்து எழுப்பியுள்ளார்.