கமல்ஹாசன் கருத்துக்கு காயத்ரி ரகுராம் பதிலடி!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தி எதிர்ப்பு என்பது தமிழகத்தில் இன்று நேற்றல்ல, கடந்த ஐம்பது ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்தி எதிர்ப்பை அரசியல் லாபத்திற்கு பயன்படுத்திய கட்சிகளும் உண்டு. எனவே இந்தி எதிர்ப்பில் கிடைக்கும் அரசியல் லாபத்திற்காக தொடர்ச்சியாக தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு என்ற போராட்டங்களை அரசியல் கட்சிகள் நடத்தி வருகின்றன. இதுவரை எந்த ஒரு மாணவர் அமைப்பும் இந்தியை எதிர்த்து போராடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இன்று காலை வீடியோ ஒன்றை வெளியிட்ட கமல்ஹாசன், அதில் இந்தி எதிர்ப்பு குறித்த தனது கருத்தை தெரிவித்திருந்தார். அதில், 'இந்தியா என்பது ஒரு அற்புத விருந்து. அதை கூடி உண்போம். திணிக்க நினைத்தால் குமட்டிவிடும் என்று தெரிவித்திருந்தார்.
கமல்ஹாசனின் இந்த கருத்து குறித்து தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்த காயத்ரி ரகுராம், 'வாழை இலை தேவை விருந்து சாப்பிட.. நம்மை தாங்கிப்பிடிக்க, ஒன்றிணைக்க ஒரு மொழியை கற்க வேண்டும். அதற்காக நம் மொழியை, கலாச்சாரத்தை விட்டுவிட வேண்டும் என்பது இல்லை' என்று தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் மற்றும் காயத்ரி ரகுராமின் கருத்துப்போரால் சமூக வலைத்தளம் பரபரப்பாகியுள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout