அறிவும் இதயமும் இல்லாத அசுரன்: காயத்ரி ரகுராம் திட்டியது யாரை தெரியுமா?

  • IndiaGlitz, [Saturday,March 10 2018]

நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஒருசில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். மேலும் சமூக வலைத்தளங்களிலும் அவர் அவ்வப்போது சமூக பிரச்சனைகள் குறித்து கருத்து தெரிவித்தும் வருகிறார். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது அவர் மீது ஏற்பட்ட வெறுப்பால் சமூகவலைத்தள பயனாளிகள் அவர் என்ன கருத்தை சொன்னாலும் அதை கிண்டலும் கேலியும் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தன்னைப்பற்றி தரக்குறைவாக விமர்சனம் செய்பவர்களை சைபர் க்ரைம் போலீஸில் புகார் செய்ய போவதாக சமீபத்தில் காயத்ரி சமூக வலைத்தள பயனாளிகளுக்கு எச்சரிக்கை செய்தார்

இந்த நிலையில் நேற்று சென்னை கல்லூரி மாணவி அஸ்வினி மரணம் குறித்து கொலையாளி அழகேசனை தனது சமூக வலைத்தளத்தில் காட்டமாக திட்டியுள்ளார். அவர் கூறியதாவது: “காதல் மிரட்டல் என்ற பெயரில் இளம்பெண் அஸ்வினியை அறிவும் இதயமும் இல்லாத அசுரன் கொலை செய்துள்ளான். அஸ்வினி குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்” என பதிவு செய்துள்ளார்.