எதிர்க்கட்சியாக இருந்தபோது ரூ.1 கோடி, முதல்வரான பின் ரூ.25 லட்சமா? ஸ்டாலினுக்கு காயத்ரி ரகுராம் கேள்வி!
- IndiaGlitz, [Thursday,May 13 2021]
கொரோனாவால் உயிரிழக்கும் முன்கள பணியாளர்களுக்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி தரவேண்டும் என எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கூதாக பாஜக பிரமுகரும் நடிகையுமான காயத்ரி ரகுராம் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்றிய ஸ்டாலின் தற்போது முதல்வரான பின் 25 லட்சம் மட்டுமே அறிவித்துள்ள
கடந்த ஏப்ரல் மாதம் திமுக தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூடியபோது அந்தக் கூட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அன்றைய எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் செய்தியாளர்களின் கூறியுள்ளார்
இந்த நிலையில் தற்போது அவரே முதல்வர் ஆகியுள்ள நிலையில் கொரோனாவால் உயிரிழக்கும் முன்கள பணியாளர்களுக்கு ரூபாய் 25 லட்சம் வழங்குவதாக அறிவித்து இருந்தார். இதுகுறித்து அதிமுக மற்றும் பாஜக பிரமுகர்கள் ஏற்கனவே முதல்வரிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்
இந்த நிலையில் நடிகையும் பாஜக பிரமுகருமான காயத்ரி ரகுராம் இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: சில நாட்களுக்கு முன்பு ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது முன் பணியாளர்கள் உயிர் இழந்தால் 1 கோடியை நிவாரணம் ஸ்டாலின் கோரினார். மோடி ஜீ மற்றும் EPS 50 லட்சம் கொடுத்தார்கள்.. அதை ஸ்டாலின் இப்பொழுது 25 லட்சமாக குறைத்து விட்டார். அன்று கேட்டது ஒன்று இன்று செய்வது ஒன்று’ என பதிவு செய்துள்ளார்.
வழக்கம்போல் காயத்ரியின் இந்த டுவிட்டுக்கு நெட்டிசன்கள் எதிர்மறை கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர். எடப்பாடி ஆட்சியில் ரூ.50 லட்சம் யாருக்கும் கொடுக்கவில்லை என்றும், ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ரூ.15 லட்சம் தருவதாக பிரதமர் மோடி கூறியது என்ன ஆச்சு என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
15 லட்சம் நீங்கள் விரும்பினால் இந்தி கற்றுக் கொள்ளுங்கள், மோடி ஜீ சொன்னதைப் புரிந்து கொள்ளுங்கள். அல்லது நீங்கள் ஸ்டாலின் தலைவர் பிட் பேப்பர் இந்தியைக் கேட்டால், நீங்கள் தவறான செய்திகளை மட்டுமே பெறுவீர்கள்.
— Gayathri Raguramm (@BJP_Gayathri_R) May 12, 2021
பத்திரிகை மற்றும் ஊடகங்களை முன் பணியாளர்கள் அவர் கருதுவதால், பத்திரிகை மற்றும் ஊடக குடும்பங்களின் இழப்புக்கு கூட அவர் 1 கோடி ஈடுசெய்ய வேண்டும். https://t.co/Gv76YSo8n1
— Gayathri Raguramm (@BJP_Gayathri_R) May 12, 2021