எல்லோரும் எவ்வளவு வெட்டி என்பது இதிலிருந்து தெரிகிறது. காயத்ரி ரகுராம்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டில் இருந்து காயத்ரி வெளியேறி பல வாரங்கள் ஆகிவிட்டாலும் அவருடைய சமூக வலைத்தளத்தில் ஓவியாவின் ரசிகர்கள் உள்பட பலர் வசை பாடுவதை இன்னும் நிறுத்தவே இல்லை. இதனால் இதுவரை பொறுமை காத்த காயத்ரி தற்போது இதுகுறித்து கொஞ்சம் கோபமாகவே சில கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.
நான் என்னுடைய முகத்திரையை உங்கள் அனைவரின் முன்னிலையிலும் நீக்கி நான் யார் என்பதை காட்டிவிட்டேன். அதேபோல் நீங்களும் தற்போது உங்கள் முகத்திரையை விலக்கி உங்கள் எதிர்மறைப் பகுதிகளைப் பாருங்கள் என்றும் ஒரு டுவீட்டிலும்,
என்னுடைய டுவீட்களினால் எரிச்சலடைபவர்கள் என்னைப் பின் தொடர வேண்டாம். உங்களுக்குப் பிடித்தவர்களை, உங்கள் ரோல் மாடல்களை பின் தொடருங்கள். எனக்கு எதிராக வசைமொழி புரிந்து உங்கள் நேரத்தை வீணாக்குவதால் எனக்கு வருத்தம் ஏற்படுகிறது என்றும் இன்னொரு டுவீட்டிலும்
பிடிக்காதவர்களை தொடர்ந்து கேலி, கிண்டல் இத்தனை நாள் செய்வதில் இருந்தே நாம் எல்லோரும் எவ்வளவு வெட்டி என்பது தெரிகிறது என்று இன்னொரு டுவீட்டிலும் அவர் தெரிவித்துள்ளார்.
காயத்ரியின் இந்த பதிவுக்கு பின்னரும் அவருக்கு வசைமொழிகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com