எங்க அம்மாவுக்கு மட்டுமே உரிமையுண்டு: கமல் கண்டிப்புக்கு காயத்ரி கண்டனம்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வரும் கமல்ஹாசன் நேற்று அனைத்து பங்கேற்பாளர்களையும் ஒரு பிடி பிடித்தார். குறிப்பாக காயத்ரியிடம் கெட்ட வார்த்தை பேசியது குறித்து கொஞ்சம் கடுமையான கண்டிப்புடன் நடந்து கொண்டார். அப்பொழுதே காயத்ரியின் முகம் சுருங்கியதை பார்க்க முடிந்தது.
இந்த நிலையில் இன்றைய புரமோவில் காயத்ரி சக பங்கேற்பாளகர்களிடம் கூறியபோது, 'மூணு வாரமா நீ கெட்ட வார்த்தை பேசற, கெட்ட வார்த்தை பேசுற என்று கூறும் இமேஜ் எனக்கு தேவையில்லை. கமல் சார் கேட்கும் கேள்விகள் எல்லாம் எனக்கு டிஸ்கரேஜிங்கா இருக்குது' என்று கூறினார். அப்போது ரைசா எனக்கும் தான் பேசினார் என்று கூறியபோது, 'என்னோடு உன்னை கம்பேர் செய்யாதே. நான் உன்னை போல் இல்லை' என்று கூறினார்.
அப்போது சக்தி 'ஏன் இப்படி அவசரப்படுகிறாய், பொறுமையாக இரு' என்று கூறியபோது, "நீ ஏன் கெட்ட வார்த்தை பேசுகிறாய் என்று கேட்க எங்க அம்மாவுக்கு மட்டுமே உரிமை உண்டு" என்று கேட்டு இதன் மூலம் கமல் எப்படி இந்த கேள்வியை என்னை கேட்கலாம் என்ற அர்த்தத்தில் காயத்ரி கூறினார். பிக்பாஸ் வீட்டில் வம்பு இழுக்க ஓவியாவும், ஜூலியும் இல்லாததால் தற்போது தனது கணையை கமல் மீதி திருப்புகின்றாரோ என்று எண்ண தோன்றுகிறது.
#VivoBiggBoss இல் இன்று இரவு 9 மணிக்கு@Vivo_India #BiggBossTamil pic.twitter.com/WIQdkJbUz3
— Vijay Television (@vijaytelevision) August 7, 2017
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments