வாழ்த்து கூறிய பாஜக பிரபலத்திற்கு 'தேங்க்யூ அங்கிள்' சொன்ன காயத்ரி ரகுராம்

  • IndiaGlitz, [Saturday,July 04 2020]

திமுக, அதிமுக ஆகிய இரண்டு முன்னணி திராவிட கட்சிகளுக்கு இடையே கட்சியை வளர்க்க பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் அவர்கள் கடந்த சில மாதங்களாக தீவிர முயற்சி செய்து வருகிறார். அந்த வகையில் பல திரையுலக பிரபலங்களை பாஜகவில் இணைத்து அவர்களுக்கு பதவியும் கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

அந்தவகையில் நேற்று புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியான போது அதில் நடிகைகள் காயத்ரி ரகுராம், கவுதமி, நமீதா, குட்டி பத்மினி, மதுவந்தி போன்ற நடிகைகளுக்கும் பதவி அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பதவி பெற்ற நடிகைகளுக்கு பாஜக பிரபலங்கள் வாழ்த்து கூறி வந்தனர்

அந்த வகையில் காயத்ரி ரகுராம் அவர்களுக்கு பாஜக பிரமுகரும், காமெடி நடிகருமான எஸ்வி சேகர் தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்த போது, அவருக்கு ‘தேங்க்யூ அங்கிள்’ என நன்றி கூறிய காயத்திரி ரகுராம், கட்சியின் வளர்ச்சிக்காகவும், தமிழக மக்களுக்காகவும் கடினமாக உழைத்து என்னால் முடிந்ததை செய்வேன் என்றும், தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்