தன் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு சென்று நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுப்பாரா சூர்யா? காயத்ரி ரகுராம் கேள்வி!
Send us your feedback to audioarticles@vaarta.com
நீட் தேர்வுக்கு எதிராக சமீபத்தில் சூர்யா நீண்ட அறிக்கையை வெளியிட்டு இருந்தார் என்பதும் அந்த அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சூர்யாவின் இந்த அறிக்கைக்கு பதிலடி தரும் வகையில் நடிகையும் பாஜக பிரமுகருமான காயத்ரி ரகுராம். சூர்யா தன்னுடைய குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு சென்று நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுப்பாரா? என கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
அரசு பள்ளியில் படித்து, உயர் கல்வி பெறும் மாணவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு கல்வியே ஆயுதம்' என, குறிப்பிட்டிருக்கும் நடிகர் சூர்யா எந்த அரசு பள்ளியில் படித்தார்? அவர் துவக்கத்தில் இருந்தே, ஆங்கில வழியில் பயிற்றுவிக்கும், தனியார் பள்ளியில் படித்தவர். பட்டப்படிப்பை கூட, லயோலா கல்லுாரியில் தான் முடித்தார். அப்படி இருப்பவருக்கு, அரசு பள்ளி மாணவர்களின் நிலை குறித்து என்ன தெரியும்?' சமூக நீதிக்கு எதிரானது' என, நீட் தேர்வு பற்றி குறிப்பிடுகிறார். இவர், நிஜத்தை அறிந்து தான் பேசுகிறாரா; இல்லை, மண்டபத்தில் யாரோ எழுதிக் கொடுத்ததை அறிக்கையாக வெளியிட்டு விட்டாரா? நீட் தேர்வு வரும் முன், பணம் படைத்தவர்கள் மட்டுமே, மருத்துவ பட்டப்படிப்பு படிக்க முடியும் என்ற சூழல் இருந்தது. 50 லட்சத்தில் இருந்து, 1 கோடி ரூபாய் வரை கட்ட வாய்ப்புள்ளவர்களுக்கு மட்டுமே, எம்.பி.பி.எஸ்., படிக்க வாய்ப்பு இருந்தது. நீட் தேர்வு வந்த பின்னே, அந்த நிலை மாறியுள்ளது.
கிராமப்புறங்களை சேர்ந்த ஏழை மாணவர்கள் அதிகம் பேர், மருத்துவ படிப்பில் சேர்கின்றனர். புள்ளி விபரங்கள் என்னிடம் உள்ளன. நீட் தேர்வால் ஆபத்து என்பதற்கான ஆதாரங்களோடு சூர்யா வரட்டும். கல்வியாளர்கள் மத்தியில், இருவரும் விவாதிக்கலாம். என் வாதம் எடுபட்டால், நீட் தேர்வு குறித்து பேசுவதை, நடிகர் சூர்யா விட்டு விட வேண்டும். தி.மு.க., தான் சொல்ல வேண்டியதை சொல்ல முடியாமல் தடுமாறினால், சூர்யா முட்டுக் கொடுக்க வந்து விடுகிறார். சூர்யா குடும்பத்தினர், இனிமேல், தி.மு.க., கரை வேட்டி கட்டிக் கொள்வது பொருத்தமாக இருக்கும்.
நீட் தேர்வை சினிமா படப்பிடிப்பு நடத்துவது போல, சூர்யா நினைத்துக் கொண்டிருக்கிறார். அந்த மாயையில் இருந்து, அவர் விடுபட வேண்டும். நீட் தேர்வை எதிர்கொள்ள தயாராக இருக்கும் அரசு பள்ளி மாணவர்கள், சூர்யா வீட்டுக்கு சென்று, நீட் தேர்வு குறித்து வகுப்பு எடுக்கும் சூழல் உருவாகும்; அதற்கு ஏற்பாடு செய்யப்படும். சூர்யாவின் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் படிப்பவர்கள், நீட் தேர்வுக்கு தயார் படுத்தப்படுகின்றனர். அங்கு சென்று நீட் தேர்வு ஆபத்து என, குரல் கொடுப்பாரா சூர்யா? பொய் தகவல்களை கூறி, தமிழக மாணவர்கள் வாழ்க்கையில், சூர்யா விளையாடக்கூடாது. மீறினால், விளைவுகள் கடுமையாக இருக்கும். இவ்வாறு காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com