மக்கள் பைத்தியக்காரர்களாக மாறிவிட்டார்கள்: நேசமணி டிரெண்ட் குறித்து பிக்பாஸ் பிரபலம்!

  • IndiaGlitz, [Thursday,May 30 2019]

நேற்று முதல் நேசமணி என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் உலக அளவில் டிரெண்டாகி வரும் நிலையில் இந்த டிரெண்ட் மூலம் ஆயிரக்கணக்கான மீம்ஸ்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. ஒருசிலர் இந்த விவகாரத்துடன் அரசியலையும் கலக்க ஆரம்பித்துவிட்டனர். இன்று மீண்டும் பிரதமராக நரேந்திஅர் மோடி பதவியேற்கவுள்ள நிலையில் அந்த நிகழ்ச்சியை இருட்டடிப்பு செய்யவே நேசமணியை தமிழக நெட்டிசன்கள் டிரெண்ட் ஆக்கி வருவதாகவும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் இதுகுறித்து நடிகையும் நடன இயக்குனரும் பிக்பாஸ் பிரபலமுமான காயத்ரி ரகுராம் கூறுகையில், 'இன்றைய மக்கள் பைத்தியக்காரர்களாக மாறிவிட்டனர். ஒரு நல்ல காமெடியை தேவையில்லாத ஹேஷ்டேக்காக மாற்றி, அற்பமான ஜோக்காகவும், மீம்ஸ்வாகவும் பதிவு செய்து வருகின்றனர்.

ஒருவேளை இந்த விவகாரத்தை மோடிக்கு எதிரான நீங்கள் செய்வதாக இருந்தால் அது மிகவும் தரமற்ற யோசனை. நீங்கள் மிகவும் மட்டமானவர்கள் என்பதை இது உறுதி செய்யும். உலக மக்கள் நமக்கு மூளை இல்லை என நினைக்க வாய்ப்பு உண்டு. ஒருவகையில் இந்த வகையான போலியான போராளிகளை நினைத்து எனக்கு பாவமாகவும் இருக்கிறது. ஆனால் அதே நேரத்தில் தமிழகத்தில் உள்ள அனைவரும் முட்டாள்கள் இல்லை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்' என்று கூறியுள்ளார்.