close
Choose your channels

தனுஷ் பட வதந்தி குறித்து கவுதம் மேனன் தரப்பு விளக்கம்

Monday, May 23, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கவுதம் மேனன் இயக்கி வரும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் மெயின் வில்லனாக ராணா நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் இன்னொரு வில்லன் கேரக்டரில் கவுதம் மேனனே நடிப்பதாக கடந்த சில நாட்களாக இணையதளங்களில் செய்திகள் வெளிவந்தது.
ஆனால் இந்த தகவலை கவுதம் மேனன் தரப்பினர் மறுத்துள்ளனர். கவுதம்மேனன் தற்போது 'அச்சம் என்பது மடமையடா' படத்தை முடிப்பதிலும், 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிலும் பிசியாக உள்ளார். இந்நிலையில் அவர் எப்படி வில்லனாக நடிக்க முடியும்? இந்த தகவல் முழுக்க முழுக்க தவறான தகவல் என்று தெரிவித்துள்ளனர்.
'அச்சம் என்பது மடமையடா' படத்தை முடிக்கும் நிலையில் உள்ள கவுதம்மேனன், அதே நேரத்தில் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்கு தயாராகி வருவதாகவும், இந்த படத்தில் தனுஷின் இரண்டு கெட்டப்புகளில் ஒரு கெட்டப்பின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் இரண்டாவது கெட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment