முதன்முதலாக கவுதம் மேனனுடன் இணையும் பிரபல ஹீரோ

  • IndiaGlitz, [Thursday,November 24 2016]

பிரபல இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன், அஜித்குமார், சூர்யா, சரத்குமார், தனுஷ், சிம்பு, என ரஜினி, விஜய் தவிர கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களும் நடித்துவிட்ட நிலையில் விரைவில் சீயான் விக்ரம் அவருடைய இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இதுகுறித்த தகவலை நாம் ஏற்கனவே என்ற செய்தியின் மூலம் பார்த்தோம்
இந்நிலையில் கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவிருப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. முதல்முறையாக இணையும் இந்த கூட்டணி தமிழ் சினிமாவில் மேலும் ஒரு சூப்பர் ஹிட்டை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படம் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகவுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் தனுஷின் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பெங்களூரில் ஏ.டி.எம் பணத்துடன் காணாமல் போன வேன் கண்டுபிடிப்பு

நேற்று பெங்களூரில் உள்ள கே.ஜி. சாலையில் உள்ள பேங்க் ஆப் இந்தியா ஏ.டி.எம்-க்கு பணம் நிரப்ப வந்த வேன் ரூ.1.37...

ரூ.500, ரூ.1000-க்கு இன்று கடைசி நாள். சுதாரித்து கொள்ளுங்கள் மக்களே

பாரத பிரதமர் நரேந்திரமோடி கடந்த 8ஆம் தேதி ரூ.500 மற்றும் ரூ.1000 செல்லாது என்று அதிரடியாக அறிவித்தார்...

மீண்டும் ஒருமுறை விஜய்யுடன் மோதும் விஷால்

விஷால், தமன்னா நடிப்பில் சுராஜ் இயக்கிய 'கத்திச்சண்டை' திரைப்படம் ஏற்கனவே நவம்பர் 18ஆம் தேதி...

சன்னிலியோனின் புதிய அவதாரம். இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்

கனடாவை சேர்ந்த பிரபல கவர்ச்சி நடிகை சன்னிலியோன் கடந்த 2012ஆம் ஆண்டு பாலிவுட்டில் 'ஜிஸ்ஸம் 2' ...

இந்தியாவின் முதல் பேமெண்ட் வங்கி. ஏர்டெல் தொடங்கியுள்ளது

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாகிய ஏர்டெல் நிறுவனம் இந்தியாவின்...