பிரதமருக்கு கவுதமி கடிதம் எழுதியது உண்மையா? அதிர்ச்சி தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல சந்தேகங்களை எழுப்பிய நடிகை கவுதமி, இதுகுறித்து பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். மேலும் கவுதமி தனது கடிதத்திற்கு எந்தவித பதிலும் பிரதமர் அலுவலகத்தில் இருந்து வரவில்லை என்று தெரிவித்திருந்தையும் சற்று முன் பார்த்தோம்
இந்நிலையில் நடிகை கவுதமி பிரதமருக்கு கடிதம் எழுதினாரா? என்று சந்தேகம் எழும் அளவுக்கு தற்போது செய்தி வெளிவந்துள்ளது. சென்னையைச் சேர்ந்த தீபக் என்பவர் பிரதமர் அலுவலகத்துக்கு சமீபத்தில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் நடிகை கவுதமி எழுதிய கடிதத்தின் நகல் கேட்டு விண்ணப்பித்திருந்தார். கடந்த ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி விண்ணப்பம் செய்திருந்த இவருக்கு கடந்த மாதம் பிரதமர் அலுவலகத்தில் இருந்து பதில் வந்துள்ளது. அதில் நடிகை கவுதமியிடம் இருந்து பிரதமர் அலுவலகத்திற்கு எந்த கடிதமும் வரவில்லை என்று பிரதமர் அலுவலகம் அளித்துள்ளது. இதனால் நடிகை கவுதமி உண்மையில் கடிதம் எழுதினாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இது குறித்து தீபக் செய்தியாளர்களிடம் கூறியபோது, "பிரபலமானவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பிரதமருக்கு கடிதம் எழுதுகிறேன் என்று சொல்கிறார்களே உண்மையாக எழுதுகிறார்களா? அல்லது விளம்பரத்துக்காக எழுதுகிறார்களா ? என்று தெரிந்து கொள்ளவே கேட்டிருந்தேன். ஆனால் பிரதமர் அலுவலகமோ அப்படி ஒரு கடிதம் வரவில்லை என்று கூறியுள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து விட்டேன். மேலும் கவுதமியும் விளம்பரத்துக்காகத்தான் கடிதம் எழுதியுள்ளாரோ? என்று தோன்றுகிறது. பிரதமர் அலுவலகம் தவறான தகவல் கொடுக்க வாய்ப்பில்லை. கவுதமிதான் இதற்கு விளக்கம் தரவேண்டும்" என்று கூறினார்.
இப்படி ஒரு சர்ச்சை எழுந்துள்ள நிலையில், கவுதமி இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக இன்று ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் பிரதமருக்குத் தான் எழுதிய கடிதம் பிரதமர் அலுவலகத்தை அடையவையே இல்லை என்று பதில் வந்திருப்பதும் பிரதமர் பார்வைக்கே அது போகவில்லை என்பதும் அதிர்ச்சி அளிப்பதாகக் கூறியுள்ளார். மேலும் பிரதமருக்கும் மத்திய அரசுக்கும் பல்வேறு கேள்விகளை அந்த அறிக்கையில் எழுப்பியுள்ளார்.
ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அந்த அறிக்கையை இந்த இணைப்பில் படிக்கலாம்"How is a citizen's query any less relevant?"- Gauthami asks PM Modi
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments