மார்க்கெட்டிங் தந்திரம்: கமல் கட்சி குறித்து கவுதமியின் விமர்சனம்!

  • IndiaGlitz, [Tuesday,March 30 2021]

சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகை கவுதமி, ராஜபாளையம் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ராஜபாளையம் தொகுதியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி போட்டியிடுவதால் பாஜகவுக்கு அந்த தொகுதி கிடைக்கவில்லை. இதனால் கவுதமி, இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும் பாஜக வேட்பாளர்களுக்காக தமிழகம் முழுவதும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவர் பாஜகவின் வெற்றி வாய்ப்பு குறித்து கூறியுள்ளார். கடந்த பல வருடங்களாக நான் பாஜகவை கவனித்து வருகிறேன் என்றும் இந்த கட்சி எனக்கு பிடித்ததால் அதில் இணைந்து உள்ளேன் என்றும் பாஜகவுக்கு நல்ல வெற்றி வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் மோடி மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

இந்த நிலையில் கமல்ஹாசனுடன் சுமார் 10 ஆண்டுகள் வாழ்ந்து அதன் பின் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து கவுதமி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி குறித்து கூறிய போது ’ஒவ்வொருவரும் புதிய கட்சியைத் தொடங்கும் போது மாற்றங்களைக் கொண்டு வருவோம் என்று சொல்வது வழக்கமான ஒன்றுதான். அதே மார்க்கெட்டிங் தந்திரத்தை தான் மக்கள் நீதி மய்யமும் கடைபிடித்து வருகிறது. மக்கள் நீதி மய்யத்தின் வெற்றி குறித்து மே 2ஆம் தேதிக்கு பிறகு தான் தெரியவரும் என்று அவர் கூறினார். கவுதமியின் இந்த பேட்டி வைரலாகி வருகிறது.

More News

'கோப்ரா' பட நடிகருக்கு கொரோனா தொற்று: தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல்!

விக்ரம் நடித்துள்ள 'கோப்ரா' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 

நடுக்கடலில் யோகா? மெய்சிலிர்க்க வைக்கும் இளம் நடிகையின்  டிரெக்கிங் அனுபவம்!

தமிழ், தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் இளம் நடிகை ரகுல் ப்ரீத்தி சிங். இவர் தற்போது ஒரு சில இந்தி திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

பிரதமர் மோடியின் ஆசிபெற்ற வேட்பாளர் நடிகை குஷ்பு… பிரச்சாரத்தில் தமிழக முதல்வர்!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சூறாவளி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

தமிழகம்- இந்தியில் தேர்தல் பிரச்சாரம் தேவையா? உண்மையை உடைக்கும் பரபரப்பு வீடியோ!

இந்தியாவில் மாநில மொழிகளுக்கான தனித்தன்மையைக் குறித்து  தொடர்ந்து குரல் எழுப்பப்பட்டு வருகிறது.

இயக்குனரானார் தமிழ் ஹீரோ: டைட்டில் அறிவிப்பு

பா ரஞ்சித் இயக்கிய முதல் திரைப்படமான 'அட்டகத்தி' என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் தினேஷ் என்பது தெரிந்ததே. அதன் பின்னர் அவர் 'எதிர்நீச்சல்