மகளின் சினிமா எண்ட்ரி குறித்து கவுதமியின் விளக்கம்

  • IndiaGlitz, [Saturday,March 17 2018]

கடந்த சில நாட்களுக்கு முன்னர் விக்ரம் மகன் துருவ் நடிக்கும் 'வர்மா' படத்தில் நாயகியாக கவுதமி மகள் சுப்புலட்சுமி நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்தது. ஆனால் இந்த தகவல் உண்மை அல்ல என்று கவுதமி தனது சமூக வலைத்தளத்தில் விளக்கிய பின்னர் இந்த வதந்தி முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் சுப்புலட்சுமியின் எதிர்காலம் என்ன? அவர் சினிமாவுக்கு வருவாரா? அப்படியே வந்தாலும் நடிகையாவாரா? என்பது குறித்து நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியதாவது:

எனது மகள் இப்போதுதான் 12ஆம் வகுப்பு முடித்துள்ளார். அவர் இப்போது தன்னை மேல்படிப்புக்காக தயார்படுத்தி வருகிறார். அவருக்கு சினிமா சம்பந்தமான படிப்புகளை படிக்க ஆர்வம் அதிகம். நன்றாக எழுதுவார், தொழில்நுட்ப விஷயங்களை கற்று கொள்வதில் மிகுந்த ஆர்வத்தில் உள்ளார். எனவே அவர் இப்போதைக்கு நடிகை ஆவார் என்று எனக்கு தோன்றவில்லை. ஆனால் அதே நேரத்தில் அவருடைய ஜீனில் நடிப்பு உள்ளது. எனவே அவர் நடிக்க வருவது குறித்த முடிவை எதிர்காலத்தில் எடுக்கலாம்.

என்னுடைய மகளை 3 வயதில் இருந்தே அவருக்கு என்ன பிடிக்குமோ அதையே செய்ய அனுமதித்து வருகிறேன். அவருடைய தேவைகளுக்கு அவரே முடிவு செய்வார். படிப்பு முதல் உடை வரை அவருடைய விருப்பத்தில் தான் உள்ளது. எனவே எதிர்காலத்தில் அவர் நடிகையாகவோ அல்லது தொழில்நுட்ப கலைஞராகவோ மாற முடிவு செய்தால் அதற்கு எந்த தடையும் இருக்காது' என்று கூறினார்.

More News

கமல்ஹாசனுடன் பிரிவு ஏன்? மனம் திறந்த கவுதமி

கமலுடன் ஏற்பட்ட பிரிவு குறித்து ஏற்கனவே நான் விரிவான விளக்கத்தை என்னுடைய பிளாக்கில் தெளிவாக குறிப்பிட்டுள்ளேன். இந்த முடிவை நான் ஒரே நாள் இரவில் எடுக்கவில்லை

முடிவுக்கு வந்தது 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா'.

'ராஜதந்திரம்' புகழ் வீரா மற்றும் 'குக்கூ' புகழ் மாளவிகா நாயர் மற்றும் பசுபதி, ரோபோ ஷங்கர், 'மொட்ட' ராஜேந்திரன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்த படம் 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா'.

எனது சினிமா வாழ்க்கையின் சிறந்த படங்களில் இதுவும் ஒன்று: தமன்னா

உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடித்த கண்ணே கலைமானே' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கி சமீபத்தில் முடிவடைந்தது.

மீண்டும் ரிஸ்க்கான கேரக்டரில் நயன்தாரா?

பிரபலமான நடிகைகள் மாற்றுத்திறனாளி என்ற ரிஸ்க்கான வேடத்தில் நடிக்க தயக்கம் காட்டுவார்கள். குறிப்பாக காது கேட்காத, வாய் பேசமுடியாத கேரக்டர்களில் நடிப்பது அபூர்வம்.

மீண்டும் பட்டையைக் கிளப்ப வரும் கத்துக்குட்டி

நிலா சாட்சி கிரியேஷன்ஸ் அன்வர் கபீர், ஓன் புரொடக்சன்ஸ் ராம்குமார், முருகன் தயாரிப்பில் உருவான திரைப்படம் 'கத்துக்குட்டி'. இந்த படம் சமீபத்தில் ரீலிஸாகி பலரின் பாராட்டையும் ஆதரவையும் பெற்றது