கமல்ஹாசனுடன் பிரிவு ஏன்? மனம் திறந்த கவுதமி
Send us your feedback to audioarticles@vaarta.com
கமல்ஹாசனுடன் 13 வருடங்கள் இணைந்து வாழ்ந்த நடிகை கவுதமி திடீரென கடந்த ஆண்டு பிரிந்துவிட்டதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு குறித்து பலரும் பலவிதமான கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பிய நிலையில் இதுகுறித்து கவுதமி நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் விளக்கியுள்ளார். அவர் கூறியதாவது:
கமலுடன் ஏற்பட்ட பிரிவு குறித்து ஏற்கனவே நான் விரிவான விளக்கத்தை என்னுடைய பிளாக்கில் தெளிவாக குறிப்பிட்டுள்ளேன். இந்த முடிவை நான் ஒரே நாள் இரவில் எடுக்கவில்லை. இரண்டு வருடங்கள் யோசித்து அதன் பின்னர்தான் எடுத்தேன். நாங்கள் பிரிந்ததற்கான காரணங்கள் பல இருந்தாலும் அந்த எல்லா காரணத்தையும் என்னால் வெளியே சொல்ல முடியாது. அது எங்கள் இருவருக்குமான தனிப்பட்ட விஷயம்.
இந்த உலகில் விவாதம் செய்ய எத்தனையோ பிரச்சனைகள் உள்ளன. நம்முடைய சக்தியை வெளிப்படுத்தி சாதிக்க வேண்டிய விஷயங்கள் எத்தனையோ உள்ளன, ஆனால் அவற்றில் கவனம் செலுத்தாமல் நானே பெரிதுபடுத்தாத ஒருசிறிய விஷயம் குறித்து ஏன் இவ்வளவு நாள் பொதுமக்கள் விவாதம் செய்கின்றனர் என்று எனக்கு புரியவில்லை' என்று கவுதமி தெரிவித்தார்
கமல் பிரிவு குறித்து கவுதமி தன்னுடைய பிளாகில், '"நானும், கமல்ஹாசனும் பிரிந்துவிட்டோம் என்பதை கனத்த இதயத்துடன் இன்று உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். 13 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்தோம். என் வாழ்வில் நான் எடுத்த பேரழிவு முடிவு இதுவே. மனம் ஒத்து வாழ்ந்த இருவர் அவர்கள் பாதை வெவ்வேறாக பிரிந்துவிட்டது என்பதை உணர்வது அவ்வளவு எளிதல்ல. நாங்கள் அதை புரிந்து கொண்டோம். எங்கள் பாதை இனி ஒன்று சேர்வதற்கில்லை என்பது விளங்கிற்று. இப்படி ஒரு புரிதல் ஏற்பட்ட பின்னர் எங்கள் முன்னால் இரண்டு வாய்ப்புகளே இருந்தன. ஒன்று எங்கள் தனிப்பட்ட கனவுகளை சமரசம் செய்து கொள்வது. மற்றொன்று, பரஸ்பரம் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பிரிந்து முன்னேறுவது. இவற்றில் பிரிந்து செல்வது என்ற முடிவை எடுப்பது மிகவும் கடினமாக இருந்தது. இரண்டு வருடங்களுக்கு மேல் யோசித்து இந்த முடிவை எடுத்துள்ளேன்' என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments