இதை விட சிறப்பாக வேறு என்ன இருக்க முடியும்.. வைரலாகும் கெளதமியின் வீடியோ..!

  • IndiaGlitz, [Sunday,June 18 2023]

சென்னை மழையில் நனைந்தவாறு நடிகை கௌதமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரையுலகில் கடந்த 1990 களில் முன்னணி நடிகையாக இருந்தவர் கௌதமி. கமல்ஹாசன், ரஜினிகாந்த், பிரபு, விஜயகாந்த், சத்யராஜ் உட்பட பல பிரபலங்களுடன் அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது அவர் அரசியலில் களமிறங்கி உள்ளார் என்பதும் பாஜகவில் முக்கிய பொறுப்பில் உள்ளார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் கௌதமி, தனது மகள் சுப்புலட்சுமி உடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு வருவார் என்பதும் அவை ரசிகர்கள் மத்தியில் வைரலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக சென்னையில் கோடை வெயில் கொளுத்திய நிலையில் இன்று காலை சென்னையின் பல இடங்களில் மழை பெய்தது. அந்த வகையில் நடிகை கௌதமி மழையில் நனைந்தவாறு எடுத்த வீடியோவை பதிவு செய்து ’இதை விட சிறப்பாக வேறு என்ன இருக்க முடியும்’ என்று கூறியுள்ளார். கௌதமியின் இந்த வீடியோவுக்கு லைக், கமெண்ட் குவிந்து வருகிறது.

More News

அவர் வேற , நான் வேற, விஜய்யுடன் இணைந்து பணியாற்ற முடியாது: பிரபல அரசியல் கட்சி தலைவர்..!

விஜய்யின் கொள்கைகள் வேறு, என்னுடைய கொள்கைகள் வேறு, எனவே அரசியலில் விஜய்யுடன் இணைந்து பயணம் செய்ய முடியாது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

பாஜகவில் இருந்து விலகி பிராமணர் கட்சி தொடங்க போகிறேன்: காமெடி நடிகர் பேட்டி..!

பாஜகவில் இருந்து  விலகி பிராமணர் கட்சி தொடங்கப் போகிறேன் என தமிழ் காமெடி நடிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆன்மீக அரசியல் என்று சொல்லாமல்.. விஜய் பேச்சுக்கு தமிழ் இயக்குனர் வரவேற்பு..!

ஆன்மீக அரசியல் என்று சொல்லாமல் பெரியார், அம்பேத்கர், காமராஜரை படியுங்கள் என்று விஜய் கூறியதை வரவேற்கிறேன் என தமிழ் இயக்குனர் கரு பழனியப்பன் தெரிவித்துள்ளார். 

தந்தையை கட்டிப்பிடித்து முத்தமிடும் சகோதரி நடிகைகள்.. தந்தையர் தின கொண்டாட்டம்..!

இன்று அதாவது ஜூன் 18ஆம் தேதி உலகம் முழுவதும் தந்தையர் தினம் கொண்டாட்டம் நடைபெற்று வரும் நிலையில் பல திரையுலக பிரபலங்கள் தங்களது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தந்தையுடன்

முதல்முறையாக 'தந்தையர் தினம்' கொண்டாடும் அட்லி.. க்யூட் புகைப்படங்கள்..!

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 18ஆம் தேதி உலகம் முழுவதும் 'தந்தையர் தினம்' கொண்டாடப்பட்டு வரும் நிலையில் திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள் உள்பட பலர் தங்கள் தந்தையை போற்றி பதிவுகளை செய்து வருகின்றனர்.