கமல் அரசியலை ஆதரிக்கின்றேனா? கவுதமி விளக்கம்

  • IndiaGlitz, [Sunday,February 25 2018]

நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் 'மக்கள் நீதி மய்யம்' என்ற அரசியல் கட்சியை சமீபத்தில் ஆரம்பித்துள்ளார். இந்த கட்சிக்கு திரையுலகில் இருந்தும் ஒருசிலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் கமல்ஹாசனுடன் சில ஆண்டுகள் வாழ்ந்து, பின்னர் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்துவிட்ட நடிகை கவுதமி, கமல் அரசியல் குறித்து கூறியபோது, 'கமல்ஹாசன் அரசியலை தான் ஆதரிக்கவில்லை என்றும் கமலுடன் தனக்கு எந்த தொடர்பும் கிடையாது என்றும் கூறியுள்ளார். மேலும் தன்னை கமலுடன் யாரும் ஒப்பிட்டு பேச வேண்டாம் என்றும் அவ்வாறு பேசுவது தனக்கு மனவருத்தம் அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி கமல்ஹாசன் நடித்த தசாவதாரம், விஸ்வரூபம் ஆகிய படங்களில் தான் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியதாகவும், ஆனால் அதற்குரிய சம்பளம் தனக்கு இன்னும் வழங்கப்படவில்லை என்றும் கவுதமி கூறியுள்ளார். கவுதமியின் இந்த குற்றச்சாட்டுக்கு கமல் என்ன பதில் கூறப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

ஸ்ரீதேவி மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமா், ராகுல்காந்தி இரங்கல்

நடிகை ஸ்ரீதேவியின் மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ராகுல்காந்தி உள்பட பல அரசியல் கட்சி தலைவா்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனா்.

சினிமா உலகம் ஒரு திறமைசாலியை இழந்துவிட்டது: ஸ்ரீதேவி மரணம் குறித்து ரஜினிகாந்த்

பிரபல நடிகை ஸ்ரீதேவி நேற்று இரவு மரணம் அடைந்த செய்தி ஒவ்வொரு சினிமா ரசிகனுக்கு பேரிடியான செய்தியாக இருந்தது. அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பதிவுகள் குவிந்து வருகிறது.

ஸ்ரீதேவி மரணம் குறித்து பிரபலங்கள் கூறியது என்ன தெரியுமா?

பிரபல நடிகை ஸ்ரீதேவி மரணம் குறித்து உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் கூறியதை ஏற்கனவே பார்த்தோம்.

இதையும் நான் பார்க்க நேர்ந்தது கொடுமை: ஸ்ரீதேவி மரணம் குறித்து குறித்து கமல்

பிரபல நடிகை ஸ்ரீதேவி நேற்று இரவு ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ் அல்-கைமா நகரில் திருமண நிகழ்ச்சிக்காக சென்றவர் மாரடைப்பால் திடீரென காலமானார்.

தமிழ்நாட்டுகே ஒரு அபாய போர்டு வைக்க வேண்டும்: கமல்ஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் அரசியல் கட்சிகள் ஆரம்பித்து அந்த கட்சியை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் தீவிர முயற்சியில் உள்ளார்.