என்னிடம் ஆதாரம் இருக்கின்றது: சம்பள பாக்கி குறித்து கவுதமி

  • IndiaGlitz, [Tuesday,February 27 2018]

நடிகர் கமல்ஹாசன் தனக்கு 'தசாவதாரம்' மற்றும் விஸ்வரூபம்' படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்ததற்கு சம்பளம் தரவில்லை என சமீபத்தில் நடிகை கவுதமி புகார் கூறியிருந்தார். இந்த புகாருக்கு நேற்று பதிலளித்த ராஜ்கமல் நிறுவனம், ''தசாவதாரம்' மற்றும் விஸ்வரூபம்' ஆகிய இரண்டு படங்களின் தயாரிப்பு நிறுவனம் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் அல்ல என்றும், கவுதமிக்கு சம்பள பாக்கி இருந்தால் அதை அந்த படங்களின் தயாரிப்பு நிறுவனங்களிடம் கேட்க வேண்டும் என்றும் கூறியிருந்தது.

மேலும் ராஜ்கமல் நிறுவனத்தில் ஆடை வடிவமைப்பாளராக கவுதமி பணிபுரிந்ததில் சம்பள பாக்கி இருப்பதாக ஆதாரத்தை காட்டினால் அந்த பணத்தை வழங்க தயார் என்றும் ராஜ்கமல் நிறுவனம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் இதுகுறித்து இன்று கருத்து கூறியுள்ள கவுதமி, 'என்னிடம் ஆதாரம் உள்ளது. ஆதாரம் இல்லமால் எந்த காரணமும் இல்லாமல் நான் எதுவும் பேச மாட்டேன்' என்றும் கவுதமி கூறியுள்ளார். இதனால் இந்த விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.

More News

ஸ்ரீதேவிக்காக 37 வருட வழக்கத்தை புறக்கணித்த ரஜினி

நடிகை ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை துபாயில் எதிர்பாராத வகையில் மரணம் அடைந்த நிலையில் அவருக்கு இறுதியஞ்சலி செலுத்த கோலிவுட் பிரமுகர்களான ரஜினி, கமல், நாசர் உள்பட பலர் மும்பை சென்றுள்ளனர்

கவுதமியின் சம்பள பாக்கி குற்றச்சாட்டுக்கு ராஜ்கமல் நிறுவனம் விளக்கம்

கவுதமியின் சம்பள பாக்கி குறித்த குற்றசாட்டுக்கு ராஜ்கமல் நிறுவனம் தற்போது விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து ராஜ்கமல் நிறுவனம் கூறியதாவ்து:

தமிழர்களுக்கு பெருமை தரும் வகையில் அஸ்வினுக்கு கிடைத்த புதிய பதவி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் வரும் ஏப்ரல் மாதம் முதல் நடைபெறவுள்ள நிலையில் இந்த போட்டிக்கான வீரர்கள் ஏலம் சமீபத்தில் பெங்களூரில் நடைபெற்றது.

சிரியா படுகொலையை உச்சு கொட்டுவதால் என்ன பயன்? நடிகர் பிரசன்னாவின் ஆவேச பதிவு

சிரியாவில் கடந்த ஒரு வாரத்தில் நடந்த தாக்குதலில் மட்டும் சுமார் 500 பேர் கொல்லப்பட்டதாகவும், அவர்களில் பெரும்பாலும் குழந்தைகள் என்றும் ஊடகங்களில் தலைப்பு செய்தியாக வந்து கொண்டிருக்கின்றது.

ஸ்ரீதேவியின் உடலில் ஆல்கஹால் இருந்ததா? பிரேத பரிசோதனை அறிக்கை கூறுவது என்ன?

பிரபல நடிகை ஸ்ரீதேவி எதிர்பாராதவிதமாக மாரடைப்பு ஏற்பட்டு துபாயில் மரணம் அடைந்த நிலையில் அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் கடந்த சில மணி நேரங்களாக நடைபெற்று வருகிறது.