அம்மா மகளா? அக்கா தங்கையா? லைக்ஸ்களை குவிக்கும் கெளதமியின் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Monday,March 06 2023]

நடிகை கெளதமி தனது மகளுடன் இருக்கும் புகைப்படம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் இது அம்மா மகளா? அல்லது அக்கா தங்கையா? என ரசிகர்கள் கமெண்ட் அளித்து வருகின்றனர்.

ரஜினிகாந்த் நடித்த ’குரு சிஷ்யன்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான கௌதமி அதன் பின்னர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், ராமராஜன், சத்யராஜ், பிரபு உள்பட பல பிரபலங்களுடன் நடித்தார்.

இந்த நிலையில் தற்போது அவர் பாஜகவில் இணைந்து தீவிர அரசியலில் உள்ளார் என்பதும் இருப்பினும் அவர் சில படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கவுதமியின் மகள் சுப்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது அழகிய புகைப்படங்களை பதிவு செய்து வரும் நிலையில் சற்று முன் அவர் தனது அம்மாவுடன் இருக்கும் க்யூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கௌதமிக்கு 54 வயது போல் தெரியவில்லை என்றும் இருவரும் அக்கா தங்கை போல இருக்கின்றனர் என்றும் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.