ஹீரோவாக மாறிய பிரபல இயக்குனர்

  • IndiaGlitz, [Saturday,December 08 2018]

'மின்னலே' படத்தின் மூலம் இயக்குனராகிய இயக்குனர் கெளதம் மேனன் அதன்பின்னர் 'காக்க காக்க', 'வேட்டையாடு விளையாடு', 'என்னை அறிந்தால்' உள்பட பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். மேலும் அவர் நடிக்கும் படங்களில் சிலவற்றில் ஓரிரு காட்சிகளில் நடித்தும் வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான 'கோலி சோடா 2' படத்தில் போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடித்திருந்த கெளதம் மேனன், தற்போது ஒரு படத்தில் ஹீரோவாக நடித்து வருவதாக செய்திகள் வெளிவந்துளது.

வெற்றிமாறனின் உதவியாளர் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படம் குறித்த முழு தகவல்களுடன் கூடிய அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.