விஜய்சேதுபதியின் படத்தில் அறிமுகமாகும் இயக்குனரின் மகன்!

  • IndiaGlitz, [Friday,April 26 2019]

விஜய்சேதுபதி நடிப்பில் இயக்குனர் சீனுராமசாமி இயக்கிய 'மாமனிதன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடிந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் டப்பிங் பணியை சமீபத்தில் விஜய்சேதுபதி முடித்து கொடுத்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இதனையடுத்து இந்த படத்தில் நடித்த மற்ற நடிகர், நடிகையர் டப்பிங் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் இயக்குனர் வ.கவுதமனின் மகன் தமிழ் அழகன் என்பவர் ஒரு முக்கிய கேரக்டரில் அறிமுகமாகியிருப்பதாக இயக்குனர் சீனுராமசாமி தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்து, அவருக்கு நல்ல எதிர்காலம் அமைய வாழ்த்தும் தெரிவித்துள்ளார். இயக்குனர் கவுதமன் சமீபத்தில் ஒரு அரசியல் கட்சியை தொடங்கி தூத்துகுடி தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்து பின்னர் வாபஸ் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்சேதுபதி, காயத்ரி, லலிதா, குருசோமசுந்தரம் உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ள இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜாவும் அவருடைய இசை வாரிசுகளான யுவன்ஷங்கர் ராஜா, கார்த்திக் ராஜா ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர். இந்த படத்தை யுவன்ஷங்கர் ராஜா தயாரித்துள்ளார். சுகுமார் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.