படப்பிடிப்பிற்கு தாமதமாக சிம்பு வருவது உண்மையா? கவுதம் மேனன்

  • IndiaGlitz, [Wednesday,September 09 2015]

'என்னை அறிந்தால்' படத்தை அடுத்து கவுதம் மேனன் இயக்கி வரும் திரைப்படம் 'அச்சம் என்பது மடமையடா'. இந்த படத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன், ராணா, சதீஷ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படம் குறித்து கவுதம் மேனன் கூறியதாவது: ''அச்சம் என்பது மடமையடா" படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இன்னும் 20 நாட்களில் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும். ஆனால் அதிகளவில் திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகி வருவதால், நவம்பரில் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் இந்த படம் ஒரே நேரத்தில் ரிலீசாகும். இந்த படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் ஐந்து பாடல்களை கம்போஸ் செய்து கொடுத்துவிட்டார். பாடல்கள் அனைத்தும் நன்றாக வந்துள்ளது' என்று கூறியுள்ளார்.

மேலும் சிம்பு படப்பிடிப்பிற்கு தாமதமாக வருவதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து கூறிய கவுதம் மேனன், 'என்னை பொருத்தவரையில் சிம்பு சில மணி நேரங்கள் தாமதமாக வந்தாலும், அன்றைய தினம் நாங்கள் என்ன திட்டமிட்டிருந்தோமோ, அந்த காட்சிகளை அன்றைய மாலைக்குள் முடிக்க சிம்பு முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளார். கடந்த மூன்று வருடங்களாக திரைப்படம் எதுவும் வெளியாகாததால் சில சமயம் சிம்பு மன அழுத்தத்தில் இருப்பது உண்மைதான்.. எனவே சில நேரங்களில் தாமதமாக வருவதாக அவர் கூறும்போது, அவருடைய நிலைமையை புரிந்து கொண்டு நாங்களும் சில விஷயங்களை அவருக்காகவே விட்டு கொடுத்துள்ளோம்' என்று கூறினார்.

More News

யோகியிடம் பயிற்சி எடுத்து கொண்ட 'கபாலி' நடிகர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'கபாலி' படத்தில் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்க நடிகர் கிஷோர் ஒப்பந்தமாகியுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்....

'யட்சன்' நடிகருடன் ஜோடி சேரும் ஆனந்தி?

பிரபுசாலமன் இயக்கத்தில் வெளிவந்த 'கயல்' மற்றும் சற்குணம் இயக்கத்தில் வெளிவந்த 'சண்டிவீரன்' ஆகிய படங்களில்...

அம்மா கேரக்டரில் நடிக்க நயன்தாரா தயங்கினாரா? 'மாயா' இயக்குனர் விளக்கம்

சமீபத்தில் ஜெயம் ரவியுடன் நயன்தாரா நடித்த மாபெரும் வெற்றிப்படமான 'தனி ஒருவன்' படத்தை அடுத்து அவர் நடித்துள்ள அடுத்த படமான ...

அட்லியின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்?

வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் குறிப்பிடத்தக்க நடிகராக விளங்கி வரும் சிவகார்த்திகேயன் நடித்த 'ரஜினி முருகன்' திரைப்படம் ...

மணிரத்னம் படத்தின் தழுவலா 'விஜய் 59'?

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'விஜய் 59' படத்தில் விஜய் போலீஸ் கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே...