ரசிகர்களை குழப்பத்திற்கு உள்ளாக்கிய காஜல் அகர்வால் கணவரின் புகைப்படம்!

  • IndiaGlitz, [Friday,February 05 2021]

நடிகை காஜல் அகர்வாலின் கணவர் கௌதம் பதிவு செய்த ஒரு புகைப்படம் ரசிகர்களை குழப்பத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

நடிகை காஜல் அகர்வாலுக்கு கடந்த அக்டோபர் மாதம் 30ஆம் தேதி மும்பை தொழிலதிபர் கௌதம் என்பவருடன் திருமணம் நடந்தது என்பதும் திருமணத்துக்கு பின்னர் இருவரும் மாலத்தீவுக்கு தேனிலவு சென்றார்கள் என்பதும் தெரிந்ததே. மாலத்தீவில் தேனிலவு குறித்த புகைப்படங்களை காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருந்தார் என்பதும் அவை மிகப் பெரிய அளவில் வைரலானது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் காஜல் அகர்வாலின் கணவர் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த ஒரு புகைப்படம் ரசிகர்களை குழப்பத்திற்கு உள்ளாக்கியது. அந்த புகைப்படத்தின் இருபக்கமும் காஜல் அகர்வால் இருப்பதுதான் குழப்பத்திற்கு காரணம். சிங்கப்பூரில் இருக்கும் மேடம் டுசாட்ஸ் என்று அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் காஜல் அகர்வாலின் மெழுகு சிலை பார்க்க சமீபத்தில் காஜல் தனது கணவருடன் சென்றிருந்தார். ஒரு பக்கம் காஜல் அகர்வாலும் இன்னொரு பக்கம் மெழுகுச் சிலையுடன் உள்ள காஜலுடனும் இணைந்து கெளதம் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தற்போது குழப்பமடைந்துள்ளனர். இதில் யார் உண்மையான காஜல் அகர்வால்? யார் மெழுகுச்சிலை காஜல் அகர்வால்? என்ற குழப்பமும் ரசிகர்களுக்கு ஏற்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிரஞ்சீவியுடன் ’ஆச்சார்யா’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வரும் காஜல் அகர்வால் கமல்ஹாசனுடன் இணைந்து ’இந்தியன் 2’ படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.