மீண்டும் 'துருவ நட்சத்திரம்' படத்தை ரிலீஸ் செய்யும் முயற்சி.. இத்தனை மாதங்கள் ஆகுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
சியான் விக்ரம் நடிப்பில், கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான ’துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை அறிவிக்கப்பட்டு அவ்வப்போது ஒத்திவைக்கப்பட்டது என்பதை பார்த்தோம்.
குறிப்பாக ’துருவ நட்சத்திரம்’ திரைப்படம் கடந்த நவம்பர் மாதம் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு புரமோஷன் பணிகளும் நடந்த நிலையில் கடைசி நேரத்தில் திடீரென ஒரு சில காரணங்களால் இந்த படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை என கௌதம் மேனன் வருத்தத்துடன் தெரிவித்து இருந்தார்
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் பிரச்சினைகள் கொஞ்சம் கொஞ்சமாக சரி செய்யப்பட்டு வருவதாகவும் மீண்டும் இந்த படத்தை ரிலீஸ் செய்வதற்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தற்போது வந்துள்ள தகவலின்படி ’துருவ நட்சத்திரம்’ திரைப்படம் வரும் ஜூன் அல்லது ஜூலை மாதம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே விக்ரம் நடித்த ’தங்கலான்; திரைப்படம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ’தங்கலான்; ரிலீசுக்கு பின்னர் ’துருவ நட்சத்திரம்’ படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com