முதல்முறையாக இணையும் கவுதம்மேனன் மற்றும் விஷ்ணுவிஷால்!

  • IndiaGlitz, [Friday,December 27 2019]

இயக்குனர் கவுதம்மேனன் இயக்கிய ’என்னை நோக்கி பாயும் தோட்டா’ சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது அவர் இயக்கிய ’குயீன்’ என்ற வெப்சீரிஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் அவர் தற்போது ’ஜோஸ்வா இமைபோல் காக்க’ படத்திலும் ’துருவ நட்சத்திரம்’ படத்திலும் பிசியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது விஷ்ணு விஷால் நடித்து வரும் ’எப்.ஐ.ஆர்’ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க கவுதம்மேனன் ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. விஷ்ணு விஷால் மற்றும் கவுதம்மேனன் முதல்முறையாக இணைந்திருக்கும் ’எப்.ஐ.ஆர்’ படத்தின் படப்பிடிப்பில் இன்று கவுதம்மேனன் கலந்து கொண்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. கவுதம் மேனன் ஏற்கனவே அவர் இயக்கிய சில படங்களிலும் ‘கோலி சோடா 2’ உள்பட ஒருசில படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஷ்ணு விஷால் ஜோடியாக மஞ்சிமா மோகன் நடிக்கும் இந்த படத்தில் பிக்பாஸ் புகழ் ரைசா வில்சன் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். மேலும் ’பிகில்’ புகழ் ரெபா மோனிகா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை மனு ஆனந்த் இயக்கிவருகிறார். அஸ்வந்த் இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 

More News

கட்டிடத்தில் மோதி விமானம் விபத்து: 100 பயணிகளின் கதி என்ன?

கஜகஸ்தான் நாட்டில் 100 பேர்களுடன் சென்ற விமானம் ஒன்று கட்டிடம் ஒன்றில் மோதியதால் ஏற்பட்ட விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

செல்லாத நோட்டை வைத்திருந்த மூதாட்டிக்கு உதவிக்கரம் நீட்டிய ரஜினி மக்கள் மன்றம்

கோவை மாவட்டம் கொண்டயம்பாளையம் என்ற பகுதியைச் சேர்ந்த கமலா அம்மாள் என்ற 92 வயது மூதாட்டி கடந்த பல ஆண்டுகளாக கஷ்டப்பட்டு ரூ.31,500 சேமித்து வைத்திருந்தார்.

'தளபதி 64' படப்பிடிப்பில் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்திய விஜய்சேதுபதி!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'தளபதி 64' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவது தெரிந்ததே

இன்ஸ்டாகிராமில் பழகி 11ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது!

இன்ஸ்டாகிராமில் பழகி பதினோராம் வகுப்பு மாணவி ஒருவரை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் நாமக்கல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

பிரபல சின்னத்திரை நடிகையின் கணவர் தூக்கில் தொங்கி தற்கொலை!

தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் பிரபல சின்னத்திரை நடிகை ஒருவரின் கணவர், தான் பணிபுரியும் அலுவலகத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது