கவுதம் மேனனின் அடுத்த படத்தில் 'குருதிப்புனல்' கனெக்சன்

கமல்ஹாசன், அர்ஜூன், கவுதமி நடிப்பில் கடந்த 1995ஆம் ஆண்டு வெளியான வெற்றி திரைப்படம் ‘குருதிப்புனல் இந்த படத்திற்கு கோவிந்த் நிஹாலனி கதையும் கமல்ஹாசன் திரைக்கதையும் எழுத, பி.சி.ஸ்ரீராம் இயக்கியிருந்தார்.

இந்த நிலையில் கவுதம் மேனன் இயக்கவிருக்கும் அடுத்த படம், குருதிப்புனல் கதாசிரியர் கோவிந்த் நிஹாலனியின் கதை என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

கோவிந்த் நிஹாலனியின் கதை ஒன்று நாயகிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் இருப்பதாகவும் இந்த கதைக்கு மாஸ் திரைக்கதை அமைத்து முக்கிய கேரக்டரில் அனுஷ்கா ஷெட்டியை நடிக்க வைக்க கவுதம் மேனன் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே கவுதம் மேனனின் ‘என்னை அறிந்தால்’ படத்தின் நாயகியாக அனுஷ்கா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளது.

கவுதம் மேனன் ஏற்கனவே ’துருவ நட்சத்திரம்’, ‘ஜோஸ்வா இமைபோல் காக்க’ மற்றும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘குவீன்’ ஆகிய படங்களை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.