'வெந்து தணிந்தது காடு' படத்தின் கதையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்: கெளதம் மேனன்
- IndiaGlitz, [Saturday,September 03 2022]
சிம்பு நடித்த ’வெந்து தணிந்தது காடு’ படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் நேற்று வெளியான நிலையில் இந்த விழாவில் பேசிய இயக்குனர் கௌதம் மேனன் சிம்புவை வைத்து முதலில் படமாக்க திட்டமிட்டு இருந்தது ’நதிகளிலே நீராடும் சூரியன்’ படம் தான் என்றும் அதன் பின்னர் திடீரென கதையை மாற்றி ’வெந்து தணிந்தது காடு’ படம் உருவாக்கப்பட்டது என்றும் கூறினார்.
’வெந்து தணிந்தது காடு’ மற்றும் ’நதிகளிலே நீராடும் சூரியன்’ ஆகிய படங்களின் கதைகள் வெவ்வேறு என்றும் முதலில் சில நாட்கள் ’நதிகளிலே நீராடும் சூரியன்’ படப்பிடிப்பு நடந்து அதன் பின்னர் அந்த படத்தை நிறுத்தி விட்டு புதிதாக ’வெந்து தணிந்தது காடு படத்தை படமாக்கினோம் என்றும் கூறினார்.
’நதிகளிலே நீராடும் சூரியன்’ படமாக்கும்போது சிம்புவை வைத்து வித்தியாசமாக படமாக்க வேண்டும் என்று முடிவு செய்து கதாசிரியர் ஜெயமோகன் அவர்களுடன் கலந்து ஆலோசித்து புதிய கதையை தேர்வு செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ’நதிகளிலே நீராடும் சூரியன்’ படத்திற்கு மூன்று பாடல்கள் ஏஆர் ரகுமான் கம்போஸ் செய்த நிலையில் அவரிடம் கதையை மாற்றி கூறியவுடன் ’ஒன்றும் பிரச்சனை இல்லை, நான் புதிதாக பாடல்கள் கம்போஸ் செய்து தருகிறேன் என்று அவர் ஒத்துழைப்பு கொடுத்தார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
’வெந்து தணிந்தது காடு’ படத்தில் முதலில் லவ் போர்ஷன் இல்லை என்றும் ஆனால் கௌதம் மேனன் படத்தில் லவ் போர்ஷன் இல்லாமல் எப்படி? என ஜெயமோகன் அவர்களின் மனைவி கேட்ட பின்னர்தான் இந்த படத்தில் புதிதாக லவ் போர்ஷன் இணைக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த படத்தின் நாயகி கேரக்டர் ஹீரோவை காதலிக்கும் சாதாரண கேரக்டர் இல்லை என்றும் இந்த படத்தின் கதைக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் கேரக்டரில் நடித்திருக்கிறார் என்றும் கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்.