12 வருடங்களுக்கு முன்பே 'வெந்து தணிந்தது காடு' படத்தின் கதையை கோடிட்ட கவுதம் மேனன்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிம்பு நடிப்பில் , கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகிய ’வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான நிலையில் இந்த படத்திற்கு ஏராளமான ஊடகங்கள் மற்றும் சமூக வலைதள விமர்சகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். இதனால் இந்த படம் நிச்சயம் வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் ஒன் லைன் கதையை கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பே கௌதம் மேனன் தனது படத்தில் கோடிட்டு காட்டி உள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான ’விண்ணைத்தாண்டி வருவாயா’ என்ற திரைப்படம் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் ஒரு காட்சியில் சிம்பு ’வெந்து தணிந்தது காடு’ படத்தின் ஒன்லைன் கதையை கூறுகிறார்.
இந்த படத்தில் அவர் ஒரு இயக்குனராக நடித்திருக்கும் நிலையில் தயாரிப்பாளரிடம் ’ஒரு சாமானிய இளைஞர் படிப்படியாக முன்னேறி கேங்க்ஸ்டர் டான் ஆக மாறுகிறார்’ என கதையை கூறுகிறார். இந்த கதை தான் தற்போது ’வெந்து தணிந்தது காடு’ படமாக உருவாகி உள்ளது என்பது குறிப்பிடதக்கது.
12 ஆண்டுகளுக்கு முன்பே தற்போது எடுக்கப்பட்ட படத்தின் கதையை கௌதம் மேனன் கோடிட்டு காட்டிய தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Appo Puriyala !! Ippo puriyuthu !!! Time travel. #SilambarasanTR #Silambarasan #Simbu #Atman #vendhuthanindhathukaadu #VTK #CultClassicVTK @menongautham #VTKFDFS #BBVTK @SilambarasanTR_ @VelsFilmIntl
— Hariharan Gajendran (@hariharannaidu) September 15, 2022
Digital rights is of the respective owners. Just for celebration. pic.twitter.com/g5ZDd6qqP8
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments