சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' சூப்பர் அப்டேட் தந்த கவுதம் மேனன்!

சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் ’வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது என்பதை பார்த்தோம். சென்னை மும்பை உள்பட பல பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் இறுதி கட்டமாக இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மும்பையில் தொடங்கியது

இந்த நிலையில் சற்று முன்னர் இயக்குநர் கவுதம் மேனன் தனது சமுக வலைத்தளத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். இதனை அடுத்து விரைவில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் தொடங்கும் என்றும் அதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகளும் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

சிம்புவின் ’மாநாடு’ வெற்றிக்குப் பிறகு மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் படம் ‘வெந்து தணிந்தது காடு’ படம் தான் என்பதும் இந்த படத்திற்காக அவர் தனது உடல் எடையை கணிசமாக குறைத்து ஸ்லிம்மாக தோற்றம் தருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்பு, சித்தி இதானி, ராதிகா, சித்திக், நீரஜ் மகாதேவன் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை வேல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் வசனத்தை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியுள்ளார்.

More News

மோடியின் ஆட்சியை பார்த்தால் அம்பேத்காரே பெருமைப்படுவார்: இசைஞானி இளையராஜா

பிரதமர் மோடியின் ஆட்சியை தற்போது அம்பேத்கார் பார்த்தால் அவரே பெருமைப்படுவார் என நிகழ்ச்சி ஒன்றில் இசைஞானி இளையராஜா பேசியுள்ளார் .

இன்றுடன் ஒரு வருடம் ஆகிவிட்டது: 'பீஸ்ட்' நினைவலைகளை பகிர்ந்த ஒளிப்பதிவாளர்!

இன்றுடன் ஒரு வருடம் ஆகிவிட்டது என தளபதி விஜய்யின் 'பீஸ்ட்' படத்தின் நினைவலைகளை ஒளிப்பதிவாளர் மனோஜ் தனது சமூக வலைத்தளத்தில் செய்துள்ளார்.

நடன இயக்குனரின் குழந்தைகளுடன் தளபதி விஜய் ஆடும் மாஸ் நடனம்: வைரல் வீடியோ!

தளபதி விஜய் நடன இயக்குனரின் குழந்தைகளுடன் நடனமாடும் மாஸ் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. 

அஜித்தின் 'ஏகே 61' படத்தின் மாஸ் அப்டேட்!

அஜித் நடித்து வரும் 'ஏகே 61'  படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பதும் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது

இவன போடவாடா இத்தனை பேரு? மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் செம டீசர்!

கடந்த 90 களில் பல வெற்றி படங்களில் நடித்த நடிகர் மோகன் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நடிக்கும் 'ஹரா' என்ற திரைப்படத்தை இயக்குனர் விஜய் ஸ்ரீ இயக்கி வருகிறார்