அஜித், சிம்பு படங்களை பார்க்க வேண்டாம்: கெளதம் மேனன் வேண்டுகோள்
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் நடித்த ’என்னை அறிந்தால்’ மற்றும் சிம்பு நடித்த ’அச்சம் என்பது மடமையடா’ ஆகிய இரண்டு படங்களையும் இந்த சூழ்நிலையில் பார்க்க வேண்டாம் என்று இயக்குனர் கௌதம் மேனன் அவர்கள் வீடியோ ஒன்றில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இராமநாதபுரம் மாவட்ட போலீஸ் அதிகாரிகளின் வேண்டுகோளுக்கிணங்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள இயக்குனர் கௌதம் மேனன், அதில் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் சிம்பு தனது காதலியை பைக்கில் மிக நீண்ட தூரம் அழைத்துச் செல்வார் என்றும் அதே போல் ’என்னை அறிந்தால்’ படத்தில் அஜித் தனது மகளை பல மாநிலங்களுக்கு அழைத்துச் சென்று சுற்றி காண்பித்தார் என்றும், இன்றைய சூழ்நிலையில் இந்த இரண்டு உதாரணங்கள் தவறானது என்றும் கௌதம் மேனன் குறிப்பிட்டுள்ளார்.
144 தடை உத்தரவை அனைவரும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்றும் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வந்து அபராதம் கட்டி தொல்லைப்பட வேண்டாம் என்றும் கௌதம் மேனன் கூறியுள்ளார். மேலும் இந்த ஊரடங்கு நேரத்தில் அதிக புத்தகங்களை படிக்கலாம் என்றும் ஆன்லைனில் திரைப்படங்கள் பார்க்கலாம் என்றும் கூறியுள்ள கௌதம் மேனன், உங்களால் முடிந்த அளவிற்கு தினக்கூலி செய்பவர்களுக்கு உதவி செய்யுங்கள்’ என்றும் கூறியுள்ளார் கௌதம் மேனன் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments