எனக்கே ஒரு கட்டத்தில் 'துருவ நட்சத்திரம்' ரிலீஸ் ஆகுமான்னு சந்தேகம் இருந்தது: கெளதம் மேனன்
Send us your feedback to audioarticles@vaarta.com
கௌதம் மேனன் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவான ’துருவ நட்சத்திரம்’ என்ற திரைப்படம் வரும் நவம்பர் மாதம் ரிலீஸ் ஆகயிருக்கும் நிலையில் இந்த படம் நீண்ட வருடமாக கிடப்பில் இருந்ததால் எனக்கே ஒரு கட்டத்தில் ரிலீஸ் ஆகுமா என்ற சந்தேகம் இருந்தது என சமீபத்தில் அளித்த பேட்டியில் இயக்குனர் கௌதம் மேனன் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் கௌதம் மேனனை விஜய் டிவி டிடி எடுத்த பேட்டியின் புரமோ வீடியோ சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ’என்னை எங்கே பார்த்தாலும், ’துருவ நட்சத்திரம்’ எப்போது ரிலீஸ் என்று தான் கேட்பார்கள். இதனால் எனக்கே ’துருவ நட்சத்திரம்’ ரிலீஸ் ஆகுமா? என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் தற்போது ஒரு வழியாக ரிலீஸ் ஆக உள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் இந்த படத்தின் விக்ரம் கேரக்டர் எந்த ஒரு சிக்கலான காலகட்டமாக இருந்தாலும் மிகவும் கூலாக எடுத்துச் சொல்லும் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் விநாயகன் அவர்களை இந்த மாதிரி வேறு எந்த படத்திலும் நாம் பார்த்திருக்க மாட்டோம், அந்த அளவுக்கு அவருடைய கேரக்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். இதிலிருந்து ’ஜெயிலர்’ படத்தை படத்தை விட வேற லெவலில் விநாயகன் கேரக்டர் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
’துருவ நட்சத்திரம்’ டைட்டில் குறித்து கூறிய கெளதம் மேனன் ’நான் இந்த கதையை எழுத ஆரம்பித்த போது எனக்கு ஒரு வித்தியாசமான எண்ணம் தோன்றியது, அதுதான் இந்த டைட்டில் என்று தெரிவித்தார்.
மேலும் எனது முந்தைய படத்தில் உள்ள கேரக்டர்கள் உருகி உருகி லவ் பண்ணுவார்கள். ஆனால் இந்த படத்தில் கொஞ்சம் வித்தியாசமான ரொமான்ஸ் இருக்கும் என்றும் தெரிவித்தார். இந்த பேட்டியின் முழு வீடியோ இன்று மாலை வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Indulge in an exquisite blend of coffee, laughter, and a deep dive into the journey of #DhruvaNatchathiram with our @menongautham sir and the lovely @DhivyaDharshini at 'https://t.co/IjAZkTrFwy Shop-Day' ☕🤌🏻✨
— OndragaEntertainment (@OndragaEnt) October 13, 2023
Tune in today at 5 PM🕔
Subscribe and stay… pic.twitter.com/TUZdJjxUFz
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments