'வெந்து தணிந்தது காடு' படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்த ஐடியா: கவுதம் மேனனின் ஆச்சரிய தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
சிம்பு நடிப்பில், கவுதம் மேனன் இயக்கத்தில், வேல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில், இசைப்புயல் ஏஆர் ரகுமானின் இசையில் உருவான திரைப்படம் ’வெந்து தணிந்தது காடு’. இந்த படம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் முதல் நாளே இந்த படம் ரூ.10 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்று சென்னையில் ’வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் சக்சஸ் மீட் கொண்டாடப்பட்டது. இதில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், இயக்குனர் கௌதம் மேனன், நடிகர் சிம்பு உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் கௌதம் மேனன் பேசியபோது ஒரு முக்கிய விஷயத்தை கூறினார். இந்த படத்தில் இடம்பெற்ற ’மல்லிகை பூ’ என்ற பாடல் முதலில் படத்தில் இல்லை என்றும் நானும் ஜெயமோகனும் தயாரித்த ஸ்கிரிப்டில் இந்த பாடல் கிடையாது என்றும் அவர் கூறினார்.
ஆனால் இந்த படத்தை பார்த்த இசைப்புயல் ஏஆர் ரகுமான் இந்த இடத்தில் ஒரு பாடல் வைத்தால் நன்றாக இருக்கும் என ஐடியா கொடுக்க, அவருடைய ஐடியாவை ஏற்றுக் கொண்டபின் தாமரை எழுதிய ’மல்லிகை பூ’ பாடலை இந்த இடத்தில் சேர்க்கப்பட்டதாகவும், இந்த பாடல் தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி படத்தின் வெற்றிக்கு ஒரு காரணமாக உள்ளது என்று கவுதம் மேனன் கூறியுள்ளார். எனவே இந்த பாடலுக்கு கிடைத்த வரவேற்பு முழுவதும் ஏஆர் ரகுமான் அவர்களையே சேரும் என்று பெருமையுடன் அவர் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout