கெளதம் மேனனின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு: 'காக்க காக்க' அடுத்த பாகமா?

பிரபல இயக்குனர் கெளதம் மேனன் நடிப்பில் உருவாகவிருக்கும் திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் இந்த படம் சூர்யா நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவான ‘காக்க காக்க’ படத்தின் அடுத்த பாகமா? என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி உள்ளனர்

பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் கெளதம் மேனன் நடிப்பில் உருவாகும் அடுத்த திரைப்படத்திற்கு ‘அன்பு செல்வன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை வினோத் குமார் என்பவர் இயக்கவுள்ளார். சிவா பத்மாயன் என்பவரது இசையில் உருவாகும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரபல நடிகர் விஷ்ணு விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியீட்டு இயக்குனர் கெளதம் மேனனுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான ’காக்க காக்க’ என்ற திரைப்படத்தில் சூர்யாவின் கேரக்டர் பெயர் அன்புச்செல்வன் என்பதால் இந்த படம் ’காக்க காக்க’ படத்தின் அடுத்த பாகமா? என்று கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர். இருப்பினும் அது குறித்து எந்தவித அறிவிப்பையும் படக்குழுவினர் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த படமும் ஒரு போலீஸ் கதை என்பது ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் இருந்து தெரிய வருகிறது.

More News

'அரண்மனை 3' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா உள்பட பலரது நடிப்பில் உருவான திரைப்படம் 'அரண்மனை 3'. இந்த திரைப்படம் கடந்த ஆயுத பூஜை தினத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக

'இது சட்டப்படி குற்றம்': 'ஜெய்பீம்' படம் குறித்து எச்சரிக்கை விடுத்த சூர்யா!

சூர்யா நடித்த 'ஜெய்பீம்' திரைப்படம் இன்று அமேசான் ஓடிடியில் வெளியாகி இருக்கும் நிலையில் இந்த படம் குறித்து சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்திலிருந்து எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது

புனித் ராஜ்குமார் நினைவாக விஷால்-ஆர்யா செய்த பெருமைக்குரிய செயல்!

பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் அவர்கள் சமீபத்தில் மாரடைப்பு காரணமாக திடீரென காலமானது ஒட்டுமொத்த இந்திய திரையுலகையே உலுக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் அடுத்த கேப்டன் கே.எல்.ராகுல்… வெளியான பரபரப்பு தகவல்!

டி20 உலகக்கோப்பை சாம்பியன்ஷிப் போட்டி முடிந்தவுடன் அடுத்து நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர்போட்டியில் இந்திய

இந்தியா கிரிக்கெட் அணி டி20 உலகக்கோப்பை அரைஇறுதிக்குள் நுழையுமா?

டி20 உலகக்கோப்பை போட்டிக்கான லீக் ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணியுடன் எந்தவித போராட்டமும்